sithamtv | Unsorted

Telegram-канал sithamtv - SithamTV

108

ஆன்மிகம் மற்றும் சித்தர்களின், கதைகள், செய்திகள், பாடல்கள், சிந்தனைகள், ரகசியங்கள், உபதேசங்கள், ஜீவ சமாதிகள் தொடர்பான தகவல்கள் வெளியிடும் உங்கள் சித்தம் டிவி.. அனைத்து செய்திகளையும் ஒரே தளத்தில் படிக்க... http://WWW.facebook.com/SithamTV @SithamTV

Subscribe to a channel

SithamTV

இறைவனுக்காக படைக்கப்படும் நெய்வேதியம் எப்படி இருக்க வேண்டும்!
எப்படி இருந்தால் இறைவன் அதை உடனே ஏற்றுக் கொள்வார்?

இத்தனை வகையான பலகாரங்களை நாம் இறைவனுக்கு படைப்போமா? என்ற கேள்வியினை இனி உங்களிடம் யாராவது கேட்டால், அதற்கான சரியான பதிலை நீங்கள், அவர்களிடத்தில் சொல்ல வேண்டும் என்று நினைத்தால், அல்லது இந்த கேள்விக்கான பதிலை நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால், இந்தப் பதிவின் மூலம் அதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளுங்கள்..


https://youtu.be/qaNjNykRtOs

Читать полностью…

SithamTV

ஆன்மீக ரகசியங்கள்: https://www.youtube.com/playlist?list=PLBbugJ_Pqzumjb32043gm8XRoOKisxuCw

Читать полностью…

SithamTV

உன்மையான ஞானப்பழம் எது?
ஞானப்பழ ரகசியம் நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூடியூப் சேனல் காணத்தவறாதீர்கள்...

https://youtu.be/2Wf0i9MtjA0

Читать полностью…

SithamTV

அகத்தியர் புலஸ்த்தியருக்கு சொல்லிய ராமன் யார்?
கொடியவனான ராவணனை ராமன் எவ்வாறு வென்றார் ?
நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூட்யூப் சேனலில்
காணத்தவறாதீர்கள் விரைவில்..

Читать полностью…

SithamTV

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்
நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூட்யூப் சேனலில் கண்டுகேட்டு மகிழுங்கள்..

https://youtu.be/RS4Dikhk0y0

Читать полностью…

SithamTV

குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு விளக்கும் மகா பெரியவா...

ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் உண்டு. காலம் காலமாக நம் முன்னோர்களால் வழிபடப் பெற்று வரும் குலதெய்வத்தை வழிபட்ட பிறகே நாம் அனைத்து சுப காரியங்களையும் தொடங்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் அம்மா எவ்வளவு முக்கியமோ அதேபோல் குலதெய்வ வழிபாடும் முக்கியம். குலதெய்வ வழிபாடு நம் வாழ்க்கையில் எப்போதும் துணை நின்று, பல நன்மைகளை நாம் கேட்காமலேயே அருளும்.

குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி காஞ்சி மகா பெரியவா ஒரு பக்தருக்கு உணர்த்திய சம்பவத்தை இங்கே பார்ப்போம்.

குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.
குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது.
குல தெய்வ வழிபாடு ஏழு தலைமுறைகளைக் காக்கும்.
என்பது பழமொழிகள்.

https://youtu.be/zQE2lN7id20

Читать полностью…

SithamTV

https://youtube.com/playlist?list=PLBbugJ_PqzukZneCrrzNATFO0hXDm6IMH

Читать полностью…

SithamTV

https://youtu.be/bUHMxZppGpk

Читать полностью…

SithamTV

இதுவரை நீங்கள் அறியாத #போகர் ரகசியம் காணத்தவறாதீர்கள்...

https://youtu.be/OLbEM4C0KFY

Читать полностью…

SithamTV

"கொடி மரம் பிறந்த கதை"

அனைவரும் கேட்டு தங்களுடைய கருத்துகளை பதிவிடவும்

https://youtu.be/Mx84wTpG-sg

Читать полностью…

SithamTV

#sithargalinrajjiyam #Sithargalinrajiyam

Читать полностью…

SithamTV

#தாலியை_கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள் !

#திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இத்தகைய திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற்றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதுதான் ஹைலைட். மாங்கல்ய தாரணம் என்று இதைக் குறிப்பிடுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட புனித நேரத்தில், மங்கள நாதஸ்வரமும் மேளமும் முழங்க கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள மணப்பெண்ணை நேராக நோக்கி, அவள் கழுத்தில் மங்கள தாலியைக் கட்டுகின்றான். முதல் முடிச்சை மணமகனும் மற்ற இரண்டை அவன் சகோதரியும் போட, மாங்கல்ய தாரணம் நடைபெறுகிறது.

#கல்யாணம் என்பது பெண்களுக்குத்தான் சிறப்பைத் தரும். பார்வதி கல்யாணம், லக்ஷ்மி கல்யாணம், கௌரீ கல்யாணம், சீதா கல்யாணம், வள்ளி கல்யாணம், ருக்மிணி கல்யாணம் என்று பெண்கள் பெயரில் இணைந்து விளங்கிவருவது கல்யாணமாகும். அதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், மாங்கல்யம் (தாலி) அணிவதாகும்.

#திருமாங்கல்ய சரடு எனும் தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சு இடுவதுதான் தாலி கட்டுதல். இறைவன், தேவர்கள் மற்றும் விண்ணவர்களின் சாட்சியாகப் போடப்படுவது முதல் முடிச்சு. முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சு. பெற்றோர்கள், திருமணத்துக்கு வருகை தந்தவர்களின் சாட்சியாகக் போடப்படுவது மூன்றாம் முடிச்சு. அறம், பொருள், இன்பம் படி வாழ்க்கை நடத்துவோம் என்பதைக் குறிப்பதற்கு மூன்று முடிச்சு. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயரால் உறவை உறுதிப்படுத்துவது. கணவன், மூத்தோன், இறைவன் ஆகிய மூவரின் சொற்படி நடக்க மூன்று முடிச்சு.

#விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை இந்த முடிச்சுகள் குறிக்கும். இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மைமிக்கவளாகத் திகழ வேண்டும். தெய்வ பக்தி, குடும்பப் பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.

கூறை உடுத்தி வந்த மணமகள், மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்தத்தில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து, குருவான புரோஹிதர் ஆசிர்வதித்துக் கொடுக்கும் மாங்கல்யத்தை இருகரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க, மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம் “மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா, கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவச ரதசதம்”. அதாவது, ‘ஓம்! பாக்கியவதியே, நான் சீரஞ்சீவியாக இருப்பதற்குக் காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக’ என்று அர்த்தம்.

திருமணத்தின்போது மணமகன், மணமகளை தன் உரிமை மனைவியாக அடையாளப்படுத்த அணிகின்ற ஒரு ஆபரணமே “மாங்கல்யம்” எனும் தாலியாகும். தாலி அணிந்த பெண்ணானவள் விவாகமாகியவள் என்பதையும், கணவன் உயிருடன் இருப்பதையும் உறுதி செய்வதோடு, அவள் ஒரு ‘‘சுமங்கலி” என்பதையும் காட்டி நிற்கின்றது. ஒரு ஆடவன், தாலி அணிந்த பெண்ணைக் காணும்போது, இவள் திருமணமான ஒரு பெண் என்று விலகிப்போவான்.

இதனால்தான் "தாலி பெண்ணுக்கு வேலி" எனும் முதுமொழி தோன்றியதோ! திருமாங்கல்யச் சரடு, ஒன்பது இழைகள் கொண்டது. தெய்வீக குணம், தூய்மை குணம், மேன்மை, ஆற்றல், விவேகம், தொண்டு, தன்னடக்கம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் ஆகியவைதான் அந்த ஒன்பது இழைகள். மாங்கல்ய சூத்ரம் எனப்படும் தாலிக் கயிறுக்கு ரகசிய ஆபரணம் என்றும் பெயருண்டு. மணமானவள் என்று அனைவருக்கும் தெரிய வேண்டியது மாங்கல்யச் சரடு மட்டுமே. கணவனுக்கு மட்டுமே தெரிய வேண்டியது திருமாங்கல்யம்.

அம்பிகையின் மகிமையைப் போற்றும் லலிதா சகஸ்ரநாமத்தில், ‘‘காமேஸ பந்த மாங்கல்ய ஸூத்ர ஸோபித கந்தரா” என்று அம்பிகை போற்றப்படுகிறாள். சிவபெருமானால் கட்டப்பட்ட திருமாங்கல்யச் சரடு அலங்கரிக்கும் அழகான கழுத்தை உடையவள் என்பது இதன் பொருள். ஆயிரமாயிரம் ஆபரணங்களை அணிந்தாலும், அம்பிகைக்கு அழகு சேர்ப்பது மாங்கல்யம் சூடியிருக்கும் மஞ்சள் கயிறுதான். ஆதிசங்கரர், சௌந்தர்யலஹரியில் அம்பாளின் திருமாங்கல்ய மகிமையைப் போற்றுகிறார். எத்தனை நகை அணிந்தாலும், சம்பிரதாயத்தின் சின்னமான மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தைக் கட்டிக்கொள்வதே சிறப்பு என்பதை இது உணர்த்துகிறது.

#இத்தனை சிறப்பு வாய்ந்த திருமாங்கல்யம் எனும் தாலியை கட்டிக்கொள்வது என்பது பெண்களுக்கு இந்தக் காலத்தில் ஃபேஷனாகிவிட்டது. பாரம்பரியத்தை தூக்கி எறிந்துவிட்டு, தாலியில் என்னவெல்லாம் கொடுமைகள் செய்யமுடியுமோ அத்தனையும் செய்கின்றனர்.

Читать полностью…

SithamTV

அன்னதானத்தின் மகத்துவம் பற்றி வள்ளலார் சொன்னது...

மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு. அன்னதானம் ஒருவரின் பசியைப் போக்குவது எவ்வளவு புண்ணியம் வாய்ந்த செயல் என்று வள்ளலார் பெருமான் பகன்றதை இங்கே கேட்டு பாருங்கள் , கண்ணீர் பெருகும்...

https://youtu.be/asTMSZXHGrM

நமது குழுவில் உள்ளவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது ...

#அன்னதானம் #வள்ளலார் #Sithargalinrajiyam #SithamTV #சித்தம்டிவி #சித்தர்களின்_ராஜ்ஜியம்

Читать полностью…

SithamTV

இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….

Читать полностью…

SithamTV

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே

ஆடிய பாதனே அம்பல வாணனே
ஆடிய பாதனே அம்பல வாணனே
நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

நந்தனார் நாயகனை வணங்குகிறேன்!

Читать полностью…

SithamTV

சட்டி சித்தர் எனும் மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள் வாழ்க்கையில் நடந்த அறியாத பல ரகசியங்கள் நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூடியூப் சேனல் காணத்தவறாதீர்கள் ....

https://youtu.be/F01PBCpky90

Читать полностью…

SithamTV

நமது சித்தர்களின் ராஜ்ஜியம் குழுவில் இருக்கும் அனைத்து உயிர்களும் வணக்கம்,

கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால், இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்லா வனாந்திரங்களும், மலைப் பிரதேசங்களுக்கும், பாலைவனங்களுக்கும் , தீவுகளுக்கும், மலைக்காடுகளுக்கும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விட்டனர்.

இவர்கள் தத்துவதரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள். எல்லா ஜீவன்களும் இன்புற்று இருப்பதற்கான வழிமுறைகளை, உபாயங்களை எல்லாம் கையாளுகின்றவர்கள். தன்னடக்கம் உருவானவர்கள். பற்றற்ற வாழ்க்கையில் இவர்களுக்குப் பூரண ஞானம் கிடைக்கிறது.

தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் சித்தர்களுக்கு என்று தனித்துவமான ஓர் இடம் உண்டு. பல துறைகளில் சித்தர்கள் பாடியுள்ள பாடல் நமக்கு கிடைத்த அற்புதமான ஒரு பொக்கிஷங்கள்.
சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை.

பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிக எளிமையாக சித்தர்கள் பற்றிய உண்மைகளை எல்லோரும் அறியவேண்டும் என்பதே இந்த சித்தம் தொலைக்காட்சி நோக்கம்.

ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள்,அவர்களைப் பற்றி எடுத்துக் கூறவே இந்த "சித்தர்களின் ராஜ்ஜியம்
நமது யூடியூப் சேனலான "சித்தர்களின் ராஜ்ஜியம்"

சேர கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் எங்களுக்கு விருப்பம் தெரிவித்து ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் இதன் மூலம் மேலும் இணைந்து பயணிக்க உறுதுணையாக இருக்கும்..

https://www.youtube.com/c/sithargalinrajiyam?sub_confirmation=1

Читать полностью…

SithamTV

அகத்தியர் புலஸ்த்தியருக்கு சொல்லிய ரகசியம் ராமன் யார்?
கொடியவனான ராவணனை ராமன் எவ்வாறு வென்றார் ?

நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூட்யூப் சேனலில் காணத்தவறாதீர்கள் ...

https://youtu.be/N5h2ouwaFp4

#ராமன் #லட்சுமணன் #இராமாயணம் #இராவணன் #அகத்தியர் #புலஸ்த்தியர்

Читать полностью…

SithamTV

தேங்காய் உடைப்பது எதற்காக? மகா பெரியவர் விளக்கம் அனைவரும் கேட்டு மகிழுங்கள்..
@சித்தர்களின் ராஜ்ஜியம் 

https://youtu.be/_JSclm1i1hA

Читать полностью…

SithamTV

அனைத்து நண்பர்களும் சித்தர்களின் ராஜ்ஜியம் Youtube சேனலை Subscribe செய்து எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

https://www.youtube.com/channel/UCJhu0CA-dQuL2y_UnwxKZPw

Читать полностью…

SithamTV

https://www.youtube.com/watch?v=Ge9fsLKXd34

Читать полностью…

SithamTV

மகா பெரியவர் உபதேசம்..

https://youtube.com/playlist?list=PLBbugJ_Pqzumsvf9A9082-edFmNOWRSFB

Читать полностью…

SithamTV

நடராஜரின் அருளைப் பெற நடராஜர் பத்து :

தில்லையில் விளங்கும் ஸ்ரீ நடராஜரின் மேல் அளவிற்கடந்த பக்தியினால் “நடராஜப் பத்து” பாடல்களை சிறுமணவூர் முனுசாமி அவர்கள் முன்னூறு வருடங்களுக்கு முன்பு எழுதியுள்ளார்…

தற்போது சிறுமணைவை எனும் ஊர் பெயர் மாற்றம் ஏற்பட்டு, திருவள்ளூர் தாலுக்காவில், கருமுத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. அவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலமாகத் திகழ்ந்தது…

திருவாசகத்திற்கு இணையாக தில்லை நடராஜரின் மீது பாடப்பட்ட நடராஜ பத்து ஆகும்.

மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள் ஆகும்.

ஒவ்வொரு பாடலின் முடிவிலும் “ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே” என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது.

இதனை ஒரு மனதோடு படித்தால் இதன் பொருளும் எளிதாக விளங்கும். ஓம் நடராஜா பெருமானே போற்றி…. அனைவருக்கும் நடராஜரின் அருள் கிடைக்கட்டும்…

அனைவரும் கேட்டு பயன்பெறுங்கள்.

https://youtu.be/nCg_Yfpwm5c

Читать полностью…

SithamTV

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு. அவரிடத்து சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டும்.

https://youtu.be/G6s52wO8t7k

Читать полностью…

SithamTV

https://youtu.be/vOmk_vYZybI

Читать полностью…

SithamTV

வேலைக்குச் செல்லும் பெண்களில், முக்கியமாக தகவல் தொடர்பு எனும் ஐடி மற்றும் எம்.என்.சி. எனப்படும் வெளிநாடு சார்ந்த நிறுவனங்களில் பணிப்புரியும் பெண்கள், தாங்கள் வேலைக்குச் செல்லும்போது, தங்களைத் திருமணம் ஆகாதவர்போல காட்டிக்கொள்வதில் பெருமிதம் கொள்கின்றனர்.

#மங்கல நாண் எனப்படும் தாலியை தேவைப்படும்போது அணிந்துகொள்வது; தேவையற்ற நேரத்தில், முக்கியமாக படுக்கைக்குச் செல்லும்போது கழட்டி ஆணியில் மாட்டிவிடுவது.

திருமாங்கல்யம் அணிந்தால் திருமணமானது தெரிந்துவிடும் எனக் கருதி, திருமாங்கல்யத்துக்குப் பதில் செயின், மணி அல்லது தங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பொருளை அணிந்துகொள்வது.

திருமாங்கல்யத்தின் நூல்கள் பிரிந்திருந்தாலும், அதை மாற்றாமல் இருப்பது.

குளிக்கும்போது, திருமாங்கல்யத்துக்கு மஞ்சள் பூசாமல் குளிப்பது.

என்று செய்யக்கூடாத பலவற்றைச் செய்கின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது.

ஜோதிடத்தில் திருமாங்கல்யம் :

#ஜோதிடத்தில், புனிதமான விஷயங்களுக்கெல்லாம் குரு பகவான்தான் காரகராவார். குரு பகவானைக் குறிக்கும்விதமாகதான், திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றில் தங்கத்தில் செய்யப்படுகிறது. வேதம் ஓதும் அந்தணர்களுக்கும் காரகர் குரு பகவானே ஆகும். கணவனின் ஆயுள் நிலைக்கவும், மனைவியின் மங்கலத்தன்மை நிலைப்பதற்காகவும் குருவின் அருள் நிறைந்த திருமாங்கல்யம் அணியப்படுகிறது.

#மேலும், குரு பகவான் புத்திரகாரகன் ஆவார். திருமாங்கல்யம் அணியும்போது, தங்கம் பெண்களின் வயிற்றுப் பகுதியில் படுவதால், புத்திர தோஷம் நீங்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

திருமாங்கல்யச் சரடு எனும் நூல் கயிற்றில், நூல் மற்றும் பருத்தி சுக்கிரனின் காரகம் பெற்றதாகும். கொடி மற்றும் கயிறுகள் போன்றவை கேதுவின் காரகம் நிறைந்ததாகும். ஒருவருக்கு மாங்கல்ய பலம் நிலைக்க (திருமாங்கல்யச் சரடு நிலைக்க), சுக்கிரனின் அருளோடு கேதுவின் அருள் மிகவும் முக்கியமாகும்.

திருமாங்கல்யத்தை கழட்டிவைக்கும் அமைப்பு யாருக்கு ?

திருமாங்கல்யம் என்பது மங்கலச் சின்னமாகும். அதனை எந்தக் காரணத்துக்காகக் கழட்டினாலும் அது அமங்கலம் நிறைந்த செயலே ஆகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் குரு பலமிழந்த நிலையில், அதாவது வக்ரம், நீசம் பெற்ற நிலையில், பெண்கள் கணவன் உயிரோடு இருந்தாலும்கூட திருமாங்கல்யத்தைக் கோபத்திலோ, அறியாமையினாலோ அகந்தையினாலோ கழற்றும் நிலை ஏற்படும்.

#பெண்ணின் ஜாதகத்தில் திரிகோண ஸ்தானங்களில் ராகு நின்றால், அவர்கள் அந்நிய கலாசாரத்துக்கு அடிமையாகி, திருமாங்கல்யத்தை கழற்றிவைக்கும் நிலை ஏற்படும்.

பெண்ணின் ஜாதகத்தில், செவ்வாய் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்கக் கூடாது. ஏழாமிடத்தில் ராகு மற்றும் அசுப கிரகங்கள் இருந்தால், திருமாங்கல்யத்தை கழற்றும் நிலை ஏற்படக்கூடும்.

ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் அசுபர்களுடன் சேர்ந்து, லக்னம், குடும்பம், சுகம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம், அயன சயன சுகம் ஆகிய வீடுகளில் தொடர்பு பெறக் கூடாது. அவ்வாறு இருந்தால், திருமாங்கல்யத்தைக் கழட்டும் நிலை ஏற்படும்.

எட்டு மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளில் ராகு தொடர்புகொள்ளக் கூடாது. பெண்களுக்கு எட்டு மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளில் ராகு தொடர்புகொண்டால், திருமாங்கல்யத்தைக் கழட்டிவைக்கும் நிலை ஏற்படும்.

பலமிழந்த நீச சந்திரன், 6 / 8 வீடுகளில் தொடர்புகொண்டிருந்தாலும், திருமாங்கல்யத்தைக் கழட்டிவைக்கும் நிலை ஏற்படும்.

அசுப கிரகங்கள் உச்சம் பெற்று எட்டாமிடத்தில் நிற்கக் கூடாது. பெண்களின் ஜாதகத்தில் அசுப கிரகங்கள் எட்டாமிடத்தில் உச்சம் பெறும்போது, திருமாங்கல்யம் அணிவதில் பிரச்னைகள் ஏற்படும்.

செவ்வாயும் ராகுவும் அல்லது செவ்வாயும் சனியும் சேர்க்கை பெற்று, 7 / 8-ம் வீடுகளில் நின்றாலும், திருமாங்கயம் அணிவதில் பிரச்னை ஏற்படும்.

#பெண்களின் ஜாதகத்தில், காலபுருஷனுக்குக் கழுத்துப் பகுதியான மிதுனம் மற்றும் ஜெனன ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை இருந்தால், தினம் தினம் ஒரு தாலி மாற்றும் நிலைகூட ஏற்படலாம்.

தாலியைப் போற்றவும் பாதுகாக்கவும் பரிகார ஸ்தலங்கள் :

குரு மற்றும் சுக்கிரனின் காரகம் பெற்ற திருமாங்கல்யத்தைக் கழுத்தில் அணிந்துக்கொண்டிருந்தாலே பாதி தோஷங்கள் நீங்கும். அதனை, மஞ்சள் பூசி பராமரித்து வர தாலி பாக்கியம் நிலைக்கும்.

சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்துக்கு அடிக்கடி வெள்ளிக்கிழமைகளில் சென்று தரிசித்து வர மாங்கல்ய தோஷங்கள் விலகும்.

செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபட, தாலி தோஷங்கள் நீங்கும்.

வீட்டில், வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மி பூஜை செய்வது மற்றும் சுமங்கலி பூஜை செய்வது ஆகியவை மாங்கல்ய பலம் தரும் வழிபாட்டு முறைகளாகும்.

பயனுள்ள பல சித்தர்களின் தகவல்களை பெற எங்களது முகநூல் பக்கமான சித்தர்களின் ராஜ்ஜியத்தை விருப்பம் தெரிவியுங்கள்...

https://www.facebook.com/sithargalinrajjiyam

Читать полностью…

SithamTV

அனைத்து நண்பர்களும் சித்தர்களின் ராஜ்ஜியம் Youtube சேனலை Subscribe செய்து எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

https://www.youtube.com/channel/UCJhu0CA-dQuL2y_UnwxKZPw

Читать полностью…

SithamTV

https://youtu.be/OVK94wEPpsw

Читать полностью…

SithamTV

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே

Читать полностью…

SithamTV

பட்டினத்தார் பாடல்கள்

Читать полностью…
Subscribe to a channel