ஆன்மீக ரகசியங்கள் வரிசையில் நாம் இன்று காணவிருப்பது ஞானப்பழத்தை அடைய தாய், தந்தையை சுற்றி வந்து ஆன்மீக தத்துவத்தை முதன் முதலில் எடுத்துரைத்தவர் முதல் கடவுளாக போற்றப்படும் விநாயகர்.
கீழே இருக்கும் youtube லிங்கில் கிளிக் செய்து கேட்டு மகிழவும்..
https://youtu.be/-ssaUr4L2wg?si=rQGWHF8KuFSGBXkx
ராமதேவர் சித்தர் ஜீவசமாதி தரிசனத்திற்காக 25/2/24 அன்று அழகர் கோவில் மலையேற்றத்திற்கு அனுமதி கொடுக்கிறார்கள்....!
காலை 8 மணிக்குமேல் மலையேற அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் சித்தர் ராமதேவர் ஜீவசமாதியை தரிசிக்க விருப்பம் உள்ள அன்பர்கள் காலை 8 மணிக்குள் மதுரை அழகர்கோவில் ராக்காயி கோவில் சென்று அடைய வேண்டும்!
அன்றே திரும்பலாம்! அனைவரும் வருக!
சித்தர் ராமதேவர் அருள் பெருக!
நாளை 23.2.2024 வெள்ளிக்கிழமை மகான் ஶ்ரீ படேசாகிப் சித்தர் குருபூஜை..சின்னபாபு சமுத்திரம்.. கண்டமங்கலம் இரயில்வே கேட் வழி..பாண்டி_ விழுப்புரம் சாலை.. விழுப்புரம் மாவட்டம்.
Читать полностью…போகிப் பண்டிகை காப்புக்கட்டு...
காப்புக் கட்டு என்பது வெறும் சடங்கல்ல. தமிழனின் மருத்துவ அறிவு!
மாதங்களில் அழகிய மாதம் மார்கழி. ஆண்டு முழுவதும் வெப்பத்தினால் புழுங்கித் தவிக்கும் மக்களைக் குளிர்விக்கும் மாதம். மார்கழிக்கு அடுத்து வருவது தை. தமிழர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் மாதம். அறுவடை முடிந்து, மண்ணுக்கும், கால்நடைகளுக்கும் உழவர்கள் நன்றி தெரிவிக்கும் மாதம். மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், வீடுகளில் உள்ள தேவையற்ற குப்பைகளை எரித்து, வீடுகளுக்கு வண்ணம் பூசி, மூலிகைகள், மாவிலைத் தோரணத்துடன் தை மகளை வரவேற்பது தமிழர் மரபு.
காப்புக் கட்டு என்றால் என்ன என இன்றைய ஆண்ட்ராய்டு தமிழனுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது இதுவும் ஒரு சடங்கு என விரல் சொடுக்கில் இணைய உலகத்துக்குள் உலா போய்விடலாம். ஆனால், இன்றைய இளைய தலைமுறை இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களின் சடங்குகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலை உணர்ந்துகொண்டு, அடுத்த அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
https://youtu.be/w3WegSr_5Gw
யார் இந்த குள்ளமணி குருமுனி அவரை ஏன் ஈசன் அழைத்து தென்னகத்தை சமநிலை செய்ய அனுப்ப வேண்டும் விடைகாண கீழே உள்ள யூடியூப் லிங்கை கிளிக் செய்து அந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்
https://youtu.be/EgTt1yLLYtg
சித்தர்களின் ராஜ்ஜியம்...
#Sithargalinrajiyam #SITHAMTV
புன்னகைத்த சுவாமி சொன்னார் "நீ படைக்கப்பட்டது விமான ஓட்டியாவதற்கு அல்ல. வேறு எதற்காகவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய். அதை நோக்கிச் செல். காரணங்களின்றி இங்கு எதுவும் நடக்காது".
அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய அந்த இளைஞன் பின் தீவிரமாக உழைத்து ஏவுகனை விஞ்ஞானியாகி பாரதத்தின் குடியரசு தலைவனுமானான்
அவர்தான் அப்துல் கலாம்.
சிவானந்தர் இந்தியாவின் மிகபெரும் யோகி, அதுவும் விஞ்ஞான கல்வி கற்றுவிட்டு அதெல்லாம் பணம் சம்பாதிக்கும் விஷயம் மட்டுமே, வாழ்க்கைக்கு உண்மையன தேவை ஆத்ம தெளிவு, ஆன்ம பலம் கொடுக்கும் ஆன்மீகம் என உணர்ந்து நின்றவர்.
சுருக்கமாக சொன்னால் தன்னை அறிந்தவர்.
எத்தனையோ லட்சம் மக்கள் அவரால் கல்வி, மருத்துவம், ஆன்மீக தெளிவு என பலன் பெற்றனர், இன்னும் பெற்று கொண்டே இருக்கின்றனர்.
ஒவ்வொருவர் வாழ்வும் அதன் நோக்கில் நல்லபடியாக செல்ல, அவர்கள் பிறந்த கடமையினை சரியாக செய்ய இடையூறுகளை நீக்கி வழிகாட்டினார் சுவாமி, இன்றும் அவரின் ஆஸ்ரமம் அதை தொடர்ந்து செய்கின்றது
அந்த நெல்லை பிறப்பு பாரதி போல தனித்துவம் மிக்கது, தொழுநோயாளிகளை தொட்டு அரவணைத்த உன்னத கரங்கள் அவருடையது.
ஆனால் தெரசாவுக்கு இருந்த விளம்பரமும் உலகளாவிய கொண்டாட்டமும் பாரத ரத்னா போன்ற விருதுகளும் ஏன் சுவாமி சிவானந்தாவுக்கு இல்லை.
நெல்லையில் பாரதி தவிர ஏகபட்ட பிம்பங்கள் உண்டு, பொதுநல பித்தர்கள் உண்டு. தன் ஆஸ்தி கொடுத்து பாலம் கட்டிய சுலோச்சன முதலியார் முதல் பெரும் மருத்துவ வாழ்வினை உதறி தள்ளி தொழுநோய் ஆசிரமம் அமைத்த ஞானி சிவானந்தர் வரை பலர் உண்டு.
அல்பேனியாவில் இருந்து வந்த தெரசாவினை தெரிந்த அளவு, மானிட நேயத்தில் உண்மையான பாரத மரபில் இங்கு தொழுநோயாளிகளை அரவணைத்த சுவாமி சிவானந்தா பற்றி யாருக்கும் தெரியாது.
இன்று மகான் சிவானந்தருக்கு பிறந்த நாள்.(26-11-2022)
முருகப்பெருமானோடு பேசியவர், நாகத்தின் காவலில் தவம் செய்த சித்தர்.
யார் இந்த அப்பரானந்தா சுவாமிகள்? இவர் எங்கிருந்து வந்தார்?
வாழ்க்கையில் நடந்த பல அதிசய ரகசியங்கள் நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூடியூப் சேனல் காணத்தவறாதீர்கள் ....
https://youtu.be/nJMW1WXsOUc
0
#Sithargalinrajiyam #SITHAMTV
உளுந்தூர்பேட்டை அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் கோவிலில் இன்று புரட்டாசி அமாவாசை முன்னிட்டு சுதர்சன ஹோமம் விழா ...
Читать полностью…பிண்ணாக்கீசர் :
இவர் பாம்பாட்டி சித்தரின் சீடர். இவர் நாக்கு இரண்டாகப் பிளவுபட்டிருந்ததால் பிண்ணாக்கீசர் என்று அழைக்கப்ட்டார்.
வானவீதி வழியாக பறந்து வந்த இவர், சிவகிரி என்று சிறப்பிக்கப்படும் சென்னிமலை மீது ஒரு குகையில் வாழ்ந்திருக்கிறார், சென்னிமலை மீது நீண்ட காலம் தவமியற்றி சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து, யோக நிலையில் தவம் புரிந்தார். பின் சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் ஜீவச மாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோயிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சந்நிதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முக மாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக இது விளங்குகிறது. இக்குகை, பழநி வரை நீண்டு செல்வதாகவும் நம்பப்படுகிறது.
பிண்ணாக்கீசர் எனும் தன்னாசியப்பர் ஜீவசமாதி -கோவை--பெரியநாயக்கன் பாளையம் ..
பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த செல்வபுரத்திலும் ஜீவ ஐக்கியம் பெற்று உள்ளார் .கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆளரவமே இல்லாத இந்த மலைக்கு அருகே உள்ள சிறிய குகையில் தன்னாசி அப்பர் எனும் சித்தர் ஒருவர் வசித்து வந்தார். இவர் தினமும் மலையடிவாரத்தில் இருந்த ஆலமரத்திற்கு கீழ் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். அப்பகுதியில் கால்நடை மேய்ப்போர் இவரிடம் பழகி வந்தனர். யாரிடமும் அதிகம் பேசாமல் அடிக்கடி நிஷ்டையில் இருந்த இவரின் முகத்தில் இருந்த தேஜஸக் கண்டு பின்னாளில் வணங்க ஆரம்பித்தனர். அத்துடன் தமக்கு வந்த கஷ்டங்களை சொல்லி அதனை போக்கவும் வேண்டினர். அவர் அருளாசி வழங்கியதால் நோய்கள் பறந்தோடின. இதனால் சித்தரின் புகழ் மற்ற கிராமங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.
இந்நிலையில் ஒருநாள் குகைக்குள் சென்றவர் மீண்டும் வெளியில் வரவேயில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற மக்கள் அவரின் வரவிற்காகக் காத்திருந்தனர். குகைக்குள் செல்லவும் பயம். ஆனால் இறுதிவரை அவர் வெளியில் வரவே இல்லை. பெரும்பாலும் வெகு அமைதியாக வனவிலங்குகள் சுற்றித் திரிந்த அந்த பகுதியில் அவரை வணங்கக் காத்திருந்தவர்கள் அவர் வராமல் போகவே வருத்தமடைந்தனர். அவர் தவம் செய்த ஆலமரத்திற்கு கீழ் சிலை வைத்து அவரை வணங்க ஆரம்பித்தனர். பிற்காலத்தில் பலர் தங்கள் நோய் தீர அங்கேயே தங்கி வணங்கினர். வனவிலங்குகள் அதிகமிருந்ததால் ஆண்டிற்கொரு முறை மட்டும் அங்கு விழா நடத்திக் கொண்டாடினர். தற்போது பல்வேறு பக்தர்களின் பணியினால் இன்று மிகப் பெரிய ஆலயமாகத் திகழும் இக்கோயிலில் இரு வேளை பூஜை நடக்கிறது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள வீரபாண்டி பிரிவில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே திருமலைநாயக்கன் பாளையம் வழியாக 5 கி.மீ. தொலைவில் உள்ள செல்வபுரம் கிராமத்திற்கு வரவேண்டும். இதுவரை பேருந்து வசதி உள்ளது. இதற்கு பின் மீண்டும் மேற்கே 2 கி.மீ. தொலைவு தோட்டங்களினூடே செல்லும் பாதையில் நடந்து சென்றால் கோயிலை அடையலாம். தங்குவதற்கு வசதியுண்டு.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரை.மாலை 4 மணிமுதல் 7 மணிவரை
#SithamTV #Sithargalinrajiyam #பிண்ணாக்கீசர் #பாம்பாட்டி #தன்னாசியப்பர் #ஜீவசமாதி #சென்னிமலை
Follow our WhatsApp channel link below
https://whatsapp.com/channel/0029Va9gRgPHQbS2JwtnVU3q
கணபதி ரகசியம் | The secret of Ganapati - Ganesha - Vinayaka | முழுமுதற் கடவுள் | விநாயகர் ரகசியம்..
நமது சித்தர்களின் ராஜ்ஜியம் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம் இது நமது யூடியூப் சேனலில் காணத்தவறாதீர்கள் ...
https://youtu.be/-ssaUr4L2wg
#Sithargalinrajiyam #SITHAMTV
உன்மையான ஞானப்பழம் எது?
ஞானப்பழ ரகசியம் நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூடியூப் சேனல் காணத்தவறாதீர்கள்...
https://youtu.be/2Wf0i9MtjA0
#Sithargalinrajiyam
115-வது ஆண்டு குருபூஜை நாளை 20.4.2023 வியாழக்கிழமை மகான் ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமிகள் குருபூஜை.. ஏரல்.. தூத்துக்குடி மாவட்டம்.
Eral Arulmigu Chairman Arunachala Swamy Temple
https://g.co/kgs/xtm82w
#சேர்மன் #Sithargalinrajiyam Sithargal Rajiyam
வெள்ளையானந்த சுவாமிகளின் வாழ்கை வரலாறு
நமது சித்தர்களின் ராஜ்ஜியம் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் நமது யூடியூப் சேனலில் காணத்தவறாதீர்கள் ...
https://youtu.be/d2sQqLEs7wQ
*ஏழரைப்பொன் ஆனா*. ____ திருவாங்கூர் மன்னராக இருந்த அனுசம் திருநாள் மார்த்தாண்ட வர்மன் என்பவர், தங்க தகடுகளால் போர்த்தப்பட்ட எட்டு யானை சிலைகளை செய்ததாக சொல்லப்படுகிறது. அவருக்கு பின் வந்த கார்த்திகை திருநாள் என்ற மன்னன் , அந்த யானை சிலைகளை *ஏற்றுமானூர் மகாதேவர்* ஆலயத்திற்கு வழங்கியுள்ளார். இதில் 7 யானைகள் இரண்டடி உயரமும், ஒரு யானை சிலை இதில் பாதியளவும் இருக்கும் காரணத்தால் மலையாளத்தில் *ஏழரை பொன் ஆனா* என்றழைக்கப்படுகிறன. *ஏற்றுமானூர் கோவிலில் ஆராட்டுவிழாக்காலத்தில் எட்டு, மற்றும் பத்தாம் திருநாளில் சிறிய யானையில் இறைவன் எழுந்தருள மற்ற ஏழு* *யானைகளுடனும் ஊர்வலம் வருவது நிகழ்வு.*
Читать полностью…பரமபத விளையாட்டும் பரமபத வாசலும் உட்பொருள் ரகசியம் என்ன
பரமபத விளையாட்டின் உட்பொருள் நாம் எல்லோருமே நல்ல குணங்களைக் கொண்டவர்கள் தான்.
வைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களில் சொர்க்கவாசலைத் திறக்கும் பொழுது “எப்படி எண்ண வேண்டும்? என்று சொல்லியிருந்தாலும் சொர்க்கவாசலைத் திறந்த பின் அந்த “ஆண்டவன்.., அருள் கொடுப்பான்” என்ற ஏக்கத்தில் தான் செல்கின்றார்கள்.
ஒருவரை ஒருவர் இடித்து முண்டியடித்துக் கொண்டு சென்று அங்கே வரம் கேட்கச் செல்கின்றனர்.
ஆனால் அப்பொழுது வெறுப்பு உணர்வு அங்கே தோன்றப்பட்டு
நரகலோகத்திற்குத்தான் போகச் சொல்லுமே தவிர சொர்க்கவாசல் என்று போக முடியாது.
நல்ல குணங்கள் காக்கப்படவேண்டும் என்றால் அங்கே முதலில் முந்திச் செல்வோருக்கு அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
முழுமையான விளக்கத்தை கீழே உள்ள நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூடியூப் சேனல் லிங்கில் பார்க்கவும்..
https://youtu.be/_6U_thG9ngc
#Sithargalinrajiyam
நாளை 23.2.2024 வெள்ளிக்கிழமை மகான் ஶ்ரீ அண்ணன் சுவாமிகள் குருபூஜை.. புதூர்..திருநெல்லிகாவல் அஞ்சல்..திருவாரூர் மாவட்டம்.
Читать полностью…அகத்தியர் புலஸ்த்தியருக்கு சொல்லிய ரகசியம் ராமன் யார்?
கொடியவனான ராவணனை ராமன் எவ்வாறு வென்றான் ?
ராமர் யார் என்று தேடிய நமது சித்தர்களின் ராஜ்ஜியம் குழு நமது கிடைத்தது ஒரு அதிசியம் ஒரு ரகசியம் நாமும் சற்று பொறுமையாக பார்ப்போம் வாருங்கள்
நாம் தொலைகாட்சியில் பார்த்த ராமன் கதை இது வல்ல, ராமன் என்ற அரசன் எவ்வாறு கொடியவனான ராவணனை வென்றான் என்றும், அதன் பிறகு எப்படி ராமர் சித்தர் நிலை அடைந்து இறைவனாக ஆனார் என்று அகத்தியர் மிக தெளிவாக தனது சீடரான புலஸ்த்தியருக்கு சொல்கிறார்,
ராமர், ராவணண், இலங்கை எப்படி அழிந்தது,அஞ்சினெயர் என்பவர் யார் இப்படி பட்ட பல கெள்விகளுக்கு சித்தர் நுல்களில் சொல்ல பட்டு உள்ளனர், இப்படி பட்ட பல செய்திகளை சொல்ல காலமும் பணமும் இல்லை, மக்கள் தரும் ஆதரவை ஊக்கம் என கருதி வரும் ஆண்டில் பல உன்மை விசியங்களை சொல்ல கடமை பட்டவர்களாக இருப்பொம் ..
முழு வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=N5h2ouwaFp4
#இராமாயணம் #ராமர் #SithargalinRajiyam #அகத்தியர் #இராவணன் #சித்தர்களின்_ரகசியம் #sithargalinrajiyam #SITHAMTV #சித்தர்கள் #Bhakti #devotional #Ayodhya
பரமபத விளையாட்டும் பரமபத வாசலும் உட்பொருள் ரகசியம் என்ன
பரமபத விளையாட்டின் உட்பொருள் நாம் எல்லோருமே நல்ல குணங்களைக் கொண்டவர்கள் தான்.
வைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களில் சொர்க்கவாசலைத் திறக்கும் பொழுது “எப்படி எண்ண வேண்டும்? என்று சொல்லியிருந்தாலும் சொர்க்கவாசலைத் திறந்த பின் அந்த “ஆண்டவன்.., அருள் கொடுப்பான்” என்ற ஏக்கத்தில் தான் செல்கின்றார்கள்.
ஒருவரை ஒருவர் இடித்து முண்டியடித்துக் கொண்டு சென்று அங்கே வரம் கேட்கச் செல்கின்றனர்.
ஆனால் அப்பொழுது வெறுப்பு உணர்வு அங்கே தோன்றப்பட்டு
நரகலோகத்திற்குத்தான் போகச் சொல்லுமே தவிர சொர்க்கவாசல் என்று போக முடியாது.
நல்ல குணங்கள் காக்கப்படவேண்டும் என்றால் அங்கே முதலில் முந்திச் செல்வோருக்கு அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
முழுமையான விளக்கத்தை கீழே உள்ள நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூடியூப் சேனல் லிங்கில் பார்க்கவும்..
https://youtu.be/_6U_thG9ngc
#Sithargalinrajiyam
பிரம்மஶ்ரீ சித்தயோகி சாமய்யா சுவாமிகளின் :
கோவை மாநகரத்திலிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பன்னிமடை (பண்ணீர்மடை) என்ற கிராமம். இங்கு 1892 ஆகஸ்ட் 15 ஆம் நாள் பிறந்தவர் யோகி சாமய்யா. சிறுவயதிலேயே அளவற்ற பக்தி செய்து வாழ்ந்தார் யோகி சாமய்யா.
தனது பனிரெண்டாவது வயதில் தவம் செய்யத் துவங்கினார். தவம் செய்தால் உலக வாழ்க்கையில் பற்று இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய அவர் பெற்றோர்கள். இளம்வயதிலேயே தம் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தினார்கள். பிறகு திருமணம் செய்து வைத்தார்கள்.* *இல்லற வாழ்வில் இனிதே ஈடுபட்ட சிறிது காலத்தில் உலக மயக்கம் என்ற கண்ணாடித்திரை விலகியது. தன் பிறவியின் நோக்கம் நினைவிற்கு வந்தது.
1929-இல் இவரை சந்தித்த சைவ சமய யோகி "நீ பெரிய மகானாவாய்; சமாதி நிலை அடைவாய்", என வாழ்த்திச்சென்றார். சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தன் இமாலய யாத்திரையை முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்த சித்த யோகத்தின் தந்தை சுவாமி சிவானந்த பரமஹம்சரை சந்தித்து முறைப்படி உபதேசம்* *பெற்றார். அதை தொடர்ந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.*
*அன்றைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்த கவர்னர் ஜெனரல் 'எர்வின் ' கோவையில் நகர்வலம் வந்தார். அப்போது யோகி சாமய்யா* *சாலையை கடக்க குறுக்கே சென்று விட்டார். கோபம் கொண்ட ஜெனரல் "அந்த பிச்சைக்காரனை அப்புறப்படுத்துங்கள்" என்று ஆணையிட்டார். தன்னை அகற்ற வந்தவர்களை நோக்கி "நில்" என சைகை செய்தார்.* *அவர்கள் உட்பட குதிரைகளும் நகரமுடியாமல் நின்றுவிட்டன. அவர் மகிமை உணர்ந்த ஜெனரல் மன்னிப்புக் கோரிய பின்பே வண்டி நகர்ந்தது.*
*மூதறிஞர் ராஜாஜி அவர்கள் 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்காக கோவை வந்திருந்தார். அச்சமயம் யோகி சாமய்யாவை சந்தித்து. "இந்தியாவிற்கு சுதந்திரம் எப்பொழுது கிடைக்கும்?" என்று கேட்டார்கள். அதற்கு யோகி சாமய்யா, "நான் ஜீவ சமாதி சென்று பத்து ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும்", என்றார்.*
*அதேபோன்று யோகி சாமய்யா மகாசமாதி நிலை அடைவதை மூன்று*
*மாதங்களுக்கு முன்பே தெரிவித்துவிட்டு 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள், உற்றார், உறவினர், ஊரார் முன்னிலையில் தன் தங்கையை அழைத்து தான் ஜீவ சமாதி அடையக்கூடிய நேரம் வந்துவிட்டது என்று கூறி தனது தங்கையின் மடியில் அவரது தலையை வைத்தார், பிறகு இரு கண்களும் கற கற வென சுற்றி நின்று ஜீவ சமாதியில் ஆழ்ந்தார்! ஆனால் சமாதியின் முறை அறியாத கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் அவரை சாதாரணமாக மண்ணில் புதைத்து விட்டனர்.*
*மலேசிய பயணத்திலிருந்த அவருடைய குரு சிவானந்த பரமஹம்சருக்கு ஞான திருஸ்டியில் இது தெரியவர, தம் பயணத்தை முடித்துக்கொண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கோவை பன்னிமடை வந்து மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த யோகி சாமய்யாவின் உடலை வெளியே ஏ டுத்தார்கள் உடல் கெடாமல்*
*வெதுவெதுப்பாக இருந்தது அவர்* *மீது குருவின்* *கைகள் பட்ட* *உடனேயே * *யோகி சாமய்யாவின்* *கண்களிலி* *ருந்து நீர் தாரைதாரையாகச் சொறிவதை கண்ட மக்கள் * *மகாசமாதியின்* *மகத்துவத்தைக்க* *ண்டு வியந்தனர்.* *பின்பு யோகி* *சாமய்யாவின்* *விருப்பப்படியே* *குருவின் கைகளாலேயே* *அவருக்கு முறைப்படி சமாதி வைக்கப்பட்டது!அவருடைய குரு* *பூஜை ஆண்டுதோறும் சுதந்திரதின* *மான ஆகஸ்ட் 15-ல் நடைபெற்று வருகிறது.*
*அவருடைய கணிப்புத்தவறாமல் சமாதி அடைந்து பத்து ஆண்டுகள் கழித்து அதே நாளில் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் பத்தமடை பிறப்பு, அந்தண குலத்தில் குப்புசாமி என 1887ல் பிறந்தார். வறுமையுற்ற குடும்பம் என்றாலும் அவர் படிப்பில் கெட்டிக்காரர், அதனால் அந்நாளைய மருத்துவபடிப்பினை தஞ்சாவூரில் படித்தார்.
அவரின் தந்தையின் மரணம் அவரை வறுமையில் தள்ளி 1915 களில் மலேய நாட்டுக்கு தள்ளிற்று.
அது மலேயாவின் ரப்பர் தோட்டம் ஆதிக்கம் செலுத்திய காலம், அந்நாட்டில் பெரும் தொழிலாளர்களை குவித்த வெள்ளையன் அவர்களுக்காக மருத்துவர்களையும் குவித்திருந்தான், ஓயா மழை கொட்டும் ரப்பர் எஸ்டேட்டுகளில் ,காடுகள் நிறைந்த அத்தேசத்தில் நோய் இயல்பானது பல விஷயங்களுக்கு தரமான மருத்துவர்கள் தேவையாய் இருந்த காலமது.
அப்பொழுதுதுதான் குப்புசாமி அங்கு பணியாற்றினார், மலேய தோட்ட தொழிலாளர்களில் இந்தியாவில் பொருளாராதார ரீதியாக ஒடுக்கபட்ட மக்கள் அதிகம்.
குப்புசாமி மலேயாவின் மிக சிறந்த மருத்துவராக மின்னினார் அவர், பெரும் பட்டமும் பதக்கமும் அவரை தேடி வந்தது, மிகபெரிய மருத்துவ கலாநிதியாக .
மலேயாவில் எஸ்டேட் கூலிதொழியான பெண்ணின் பிரசவத்தில் உதவி மிக கடினபட்டு தாயினையும் சேயினையும் இருநாட்கள் போராடி காத்தார் அந்த குப்புசாமி.
உயிர் பிழைத்த குடும்பம் அவர் காலில் விழுந்து நன்றி சொல்லிற்று, அந்த நன்றியில் தெய்வத்தை உணர்ந்தார் குப்புசாமி.
மலேய நாட்டில் ஒரு ஏழை குடும்பத்துக்கே இவ்வளவு உதவி தேவைபட்டால் இந்தியாவில் எவ்வளவு பெரும் உதவி தேவையாயிருக்கும் என எண்ணினார், விளைவு சேவையில் இறைவனை காணலாம் என்ற மனம் அவருக்கு வந்தது.
இன்னும் அவரின் சிந்தனை நீண்டது, மருத்துவம் நோயினை மட்டும் தீர்க்கின்றது ஆனால் மனம் சம்பந்தமான சிக்கலை, வாழ்வியலின் பல தீர்வுகளை அதனால் சொல்லமுடிவதில்லை.
ஆன்ம பலமே உண்மையான மருத்துவம் என்பதை அந்நொடியில் தெரிந்து கொண்டார்.
அவரின் மனம் ஆன்ம பலம் ,யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கியது.
தன் டாக்டர் தொழிலை உதறினார், கோட்டும் ஸ்டெஸ்கோப்பும் அகன்றது காவியும் ருத்திராட்சமும் கழுத்தில் ஏறியது, ஆயினும் மனம் நிலையின்றி தவித்தது.
தன் மனதை அடக்க ரிஷிகேஷம் சென்றார் குப்புசாமி அல்லது விதி இழுத்து சென்றது,பல நாள் பட்டினி கிடந்தார், வீதியில் உறங்கினார், பிச்சைகார கோலத்தில் ஞானம் தேடினார்.
அந்த தேடலில் மகான் விஸ்வானந்த சரஸ்வதியினை சந்தித்தார், அவர் இவரை எதிர்பார்த்து இருந்தவர் போல அழைத்து தீட்சை கொடுத்து ஞானத்தை ஞானமே அடையாளம் கண்டுகொள்ளும் என்பது போல அந்த விஸ்வானந்தர் இவருக்கு சிவானந்தர் எனும் பட்டமும் கொடுத்து மன்னனிடம் சொல்லி ஒரு காணிநிலமும் கொடுத்து ஆசிரமம் அமைத்தார்
அப்படித்தான் சிவானந்தாவின் ஆஸ்ரமம் தொடங்கியது, மெல்ல மெல்ல அவரின் ஆன்மீக மருத்துவ சேவை உள்ளிட்டவை தொடர்ந்தன
ஒரு கட்டத்தில் 100 பணியாளர்கள் கொண்ட மருத்துவ ஆஸ்ரமம் எழுந்தது, அதில் தொழுநோயாளி முதல் எல்லா நோயாளிகளும் பராமரிக்கபட்டனர்.
சிவானந்த சுவாமிகளே இந்தியாவில் ஏழை தொழுநோயாளிகளை மருத்துவரீதியாக அரவணைத்த மகான், தெரசா இவருக்கு பின்னால் வந்தவர்.
இந்தியாவின் சொந்த மக்களுக்கான தொழுநோய் மருத்துவமனையினை தொடங்கியது இந்த இந்து சன்யாசிதான்.
ஒருநாள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணோருத்தி சாமியின் சீடர்களால் காப்பாற்றபட்டு அவரிடம் கொண்டுவரபட்டார்கள், அவள் தொலைதூரத்தில் இருந்து வந்தவள், அவள் சாக துணிந்த காரணம் மணமாகாமல் கர்ப்பம் தரித்தது.
சுவாமி அவளை திட்டவில்லை, கர்ப்பம் கலைக்க சொல்லவில்லை, அவளை பெற்றோரிடமும் அனுப்பவில்லை, அனுப்பினால் என்னாகும் என்பது சுவாமிக்கு புரிந்தது.
அவள் அங்கேயே தங்க வைக்கபட்டாள் குழந்தை பிறந்ததும் குழந்தை இல்லா தம்பதியிடம் அக்குழந்தையினை ஒப்படைத்துவிட்டு அப்பெண்ணின் வழியில் அவளை போக சொன்னார்.
சுவாமியின் காலில் விழுந்து இரு பெண்களும் அழுதனர், சுவாமி நிதானமாக சொன்னார்.
"ஒரு உயிரை காத்து இன்னொரு உயிரிடம் ஒப்படைக்க இறைவன் என்னை பயன்படுத்தினான் அவ்வளவுதான்".
சிவானந்த சாமியின் புகழும் அவரின் ஞானமும் அது கொடுத்த போதனையும் ஏராளம், ஏகபட்ட புத்தகங்களை எழுதினார், உலகெல்லாம் அவர் மடம் கிளைகளும் திறந்தது.
இன்று சுமார் 300 கிளைகளுடன் மிகபெரிய தொண்டு நிறுவணமாக அது வளர்ந்தும் நிற்கின்றது
அந்த இளைஞன் 1962ல் ரிஷிகேஷில் விரக்தி நிலையில் இருந்தான், ஒல்லியான உருவமும் குள்ள வடிவமும் கொண்ட அவன் கண்களில் நீர்வழிய சுவாமி முன் நின்றிருந்தான்.
அவனையே உற்று நோக்கினார் சுவாமி, அந்த இளைஞன் கண்ணீர் விட்டு சொன்னான், "சுவாமி நான் ஏழை மீணவ வீட்டு மகன், நன்றாக படித்து பைலட்டாக வேண்டுமென கனவு கண்டேன், படித்தும் முடித்தேன்.
ஆனால் பைலட் தேர்வில் என்னை நிராகரித்துவிட்டார்கள், நான் அதற்கு தகுதி இல்லையாம், இனி நான் என்னாவேன் என எனக்கே தெரியவில்லை" என மனமுடைந்து நின்றான்.
ஏரிகாத்த ராமர் | ERI KATHA RAMAR TEMPLE MYSTERY - MADURANTAKAM
உண்மையில் கடவுளை காண முடியுமா..? அப்படி கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா..? என்ற கேள்விக்கு, ஆமாம், இருக்கிறார் என்பது பதிலாக உள்ளது. அவர் கடவுளை கண்ட சம்பவத்தை, கல்வெட்டில் பதிவாகவும் அமைத்திருக்கிறார்கள். இது 1825-ம் ஆண்டில் கிழக்கு இந்திய கம்பெனியின் செங்கல்பட்டு கலெக்டராக இருந்த கர்னல் லியோனல் பிளேஸ் என்பவருக்கு நடந்தது.
1600 ஆண்டுகள் தென்னிந்தியாவின் பழமையான பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் | Eri-Katha Ramar Temple
முழு கதையையும் கீழேயுள்ள யூ டியூப் லிங்கில் கண்டு மகிழுங்கள்
https://youtu.be/6-2SJNmZE48
#erikatharamartemple #ஏரிகாத்தராமர்கோவில் #SithargalinRajiyam
#கருமாரப்பட்டி #வெள்ளையானந்த #சுவாமிகள்
1979-ல் ஒரு வெள்ளிக்கிழமை பூண்டி மகான் சுவாமிகள் சமாதியடைந்தார். நம் வெள்ளையானந்த சுவாமிகள் மனைவி அமிர்தம்மாளை அழைத்து மறுநாள் சனிக்கிழமை முதல் தம் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப் போவதாகவும் ஆகவே கம்பு சோற்று நீராகாரத்தில் உப்பு போட்டு கொண்டு வரும்படியும் கூறினார்.இவ்வாறாக சுவாமிகள் ஐப்பசி மாதம் பூசநட்சத்திரத்தில் (5.11.2012) அன்று ஜீவசமாதி அடைந்து லிங்க வடிவமாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
சித்த புருஷர்கள் தங்கள் வழிபாட்டில் போக சக்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர்.
போகசக்தி, ஆதியிலிருந்தே இருக்கும் மூல பிரகிருதி என்னும் அண்ட சக்தி ஆகும். இந்த ஆதிசக்தியே பிரளய காலத்தில் சிவத்துடன் ஐக்கியமாகிவிடுகிறது. பின்னர் பிரபஞ்ச உற்பத்தியின்போது மறுபடியும் சிவத்திலிருந்து போகசக்தியாக வெளிப்படுகிறது. உருவ வழிபாடு என்று வரும்போது, இறைவனுடன் பிரியாவிடை அம்மனாக இருப்பதும் இந்த போகசக்தியே.
https://youtu.be/d2sQqLEs7wQ
#Sithargalinrajiyam
ஞானிகள் பொருள் தேடல் இழிவு
வர்க்கத்தார் தமைவெறுத்த விருத்தமாய்
மெய்ஞ்ஞான வடிவ மானோர்
கற்கட்டா கியமடமுங் காணியுஞ்செம்பொனுந்தேடுங் கரும மெலாம்
பொற்கொத்தாஞ் செந்நெல்வயல் தண்டலையாரேசொன்னேன் பொன்னா டாகும்
சொர்கத்தே போம்போதுங் கக்கத்தேராட்டினத்தைச் சுமந்த வாறே
#Sithargalinrajiyam #SithamTV
#அன்னதானம்
#துர்வாச முனிவர் திருமுருகன் பூண்டியை வந்தடைந்து திருமுருகநாதருக்கு பூஜைகள் செய்தார். அங்கு பிதுர்க்கிரியை செய்வதற்கு சிறந்த இடம் என்பதை உணர்ந்தர்.
#மறுதினம் தை அமாவாசை புண்ணியகாலமாக இருந்தது. எனவே தை அமாவாசை விடியற் காலையில் ஆலயத்திற்கு அருகே ஒரு பூந்தோட்டத்தில் சிவபூசை ஹோமம் செய்தார். அன்னத்தை நிவேதனம் செய்து பிதுர்களுக்கு மந்திர பூர்வமாக உணவு அளிக்கும் முன்பு காகத்திற்கு உணவு வைத்தார். அப்போது ஒரு காகம் வந்து மற்றைய காகங்களையும் கூவி அழைத்துச் சாப்பிட்டு தன் குஞ்சுக்கு கொடுக்க வாயில் உணவை அடக்கிக் கொண்டு தன் இருப்பிடம் சென்றது.
#செல்லும் வழியில் திருப்பிக்கொளியூர் என்னும் அவிநாசியிலுள்ள மற்றொரு காகம் அக்காகத்தை வந்து எதிர்த்து சோற்றைப் பறித்தது. அச்சோற்றில் சில பருக்கைகள் சிவவேடம் பூண்டவரின் பிட்சா பாத்திரத்தில் விழுந்தது. அதனை அறியாத அவர் அந்தச் சோற்றை உண்டு மகிழ்ந்தான்.
சோற்றை இழந்த காகம் வேறிடம் சென்று அன்னம் தேடி தன் குஞ்சுக்கு கொண்டு வரும்போது ஒரு வேடன் தன் அம்பால் அக்காகத்தை அடித்தான். காகம் திருப்புக்கொளியூர் எல்லையில் விழுந்து இறந்தது. அப்போது அந்த காகம் தேவவுருவம் பெற்று தேவ விமானத்தில் திருக்கைலையை அடைந்தது.
உமாதேவியரோடு சிவபெருமான் எழுந்தருளிய சந்நிதியின் முன் நின்று வணங்கி எழுந்து கை குவித்து நின்றது.
#சிவகணங்களுக்கு ஒரு காகத்திற்கு முக்தியா என்று ஆச்சரியமடைந்தனர். சிவபெருமான் புன்முறுவல் பூத்து காகம் தனது மூக்கினால் கொத்தி விழுந்த சில சோற்று பருக்கைகளை அன்னதானமாக ஒரு சிவனடியார் உண்டதனால் இக்காகம் இங்கு வந்தது என்று சிவகணங்களுக்கு கூறினார். காகத்திற்கு தீர்க்கத் துண்டன் என்ற பெயரிட்டுச் சிவகணங்களில் ஒன்றாக இருக்கச் செய்தார்...
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் 🐦
சிட்டுக்குருவி பூஜித்த பதி 🐦🐦🐦🐦
📌தஞ்சாவூர் வடக்குரங்காடுதுறை என்று போற்றப்படும் பதி ஒன்று உள்ளது, அங்கு ஒரு காலத்தில் சிட்டுக்குருவி ஒன்று நித்தமும் காவேரியாற்றிலிருந்து தனது வாய்கொள்ளும் அளவிற்கு காவேரி நீற்றை கொணர்ந்து மூலவர் ஸ்ரீ தயாநிதிஸ்வரருக்கு அபிஷேகம் செய்தும், சிறுமலர்களை கொண்டு பரமனின் சிரசை அலங்கரித்து அவரை பூஜித்தும் வந்ததாம்,
📌கருணாமூர்த்தியான எம்பெருமான் தன்னை பூஜித்து வந்த இந்த சிட்டுக்குருவிக்கு தரிசனமும் நல்கி, அத்தலத்திலேயே முக்தியும் நல்கினாராம் ஆதலால் இவ்வாலய ஈசருக்கு சிட்டிலிங்கேஸ்வரர் என்ற நாமமும் உண்டு
📌இத்தலத்தில் நல்ல வெய்யில் காலத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருமுறை நடந்து வந்து கொண்டிருந்தாள். வெய்யிற் காலமானதால் தாகம் தாங்க முடியவில்லை. தாகமும், களைப்பும் மேலிட அவள் மயக்கமுற்றாள்.
📌இதலத்தில் கோவில் கொண்டுள்ள ஈசன் இதை அறிந்தார். தாயுமானவராக திருச்சிராப்பள்ளியில் ஒரு பக்தைக்கு அருள் செய்த இறைவன் இங்கு அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார்.
📌இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். இறைவனருளால் அப்பெண் தாகம் நீங்கி புத்துணர்வு அடைந்தாள். தென்னங்குலைகளை வளைத்து அருள் புரிந்ததால் இறைவன் குலைவணங்குநாதர் என்று பெயர் பெற்றார்.
📌கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் புன்னையே, கொகுடி, முல்லை,
வேங்கையே, ஞாழலே, விம்மு பாதிரிகளே, விரவி எங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
வீங்கு நீர்ச் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே.
1. காகத்தை போல என்றும் ஒற்றுமையாக இரு #சனீஸ்வரன் அருகில் வரமாட்டார்
2. நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு
#பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித் தருவார்..
3. ஆந்தையை போல தீமையிடம் பாதுகாப்பாக விழித்திரு #லட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்...
4. சிங்கத்தை போல வீரமாக தைரியத்துடன் இரு
#பார்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள்...
5. அன்னப்பறவை நீரையும் பாலையும் பிரிப்பதை போல அறிவுள்ள நல்ல மனிதர்களுடன் நட்புக் கொள் #சரஸ்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள் ...
6. எலி போல தொழிலில் ஊழல் செய்யாமலிரு வினைகளை அழிக்கும் #விநாயகர் உன் வீடு
தேடி வருவார்...
7. மயிலை போல மகிழ்ச்சியில் எப்பொழுதும் தோகை விரித்தாடு அழகன் #முருகன் உன் வீட்டினில் அவதாரிப்பான்...
8. உன் மனம் உலக பிரச்னைகளை கடந்து வானத்தில் கருடனை போல பறக்கட்டும் அப்பொழுது #கண்ணன் வருவான் அகத்திற்கு...
9. தீமை எல்லாவற்றிக்கும் அஞ்சாத காளையாய் எதிர்த்து நில், உலகை படைத்த ஜோதியான தந்தை #ஈசனே வருவார் உன் வாழ்வினில் என்றும் துணை நிற்பதற்கு...
ஆயுத பூஜை ,சரஸ்வதி பூஜை நல்ல நேரம்
அக்டோபர் 4 ஆம் தேதி நவமி திதி மதியம் வரைதான் உள்ளது எனவே
செவ்வாய்கிழமை காலை 10.40 முதல் 11.10 வரை மற்றும் மதியம் 12.10 முதல் 1.10 வரை பூஜை செய்ய நல்ல நேரம் ஆகும்.
மறுபூஜை புதன் கிழமை சரஸ்வதி பூஜை அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை மற்றும் காலை 9 மணி முதல் 10.10 மணி வரை