எச்சரிக்கை பதிவு
நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது , ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும் .
அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால் , நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும் .
நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம் .
ஹெட்போனை தொடர்ந்து நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றனர் , அதே போல வேகமாக பாக்டீரியாக்கழும் தோன்றுகின்றது .
ஹெட்போன் பயன்படுத்துவதினால் தலைவலி , தூக்கமின்மை , மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்படைகின்றோம் ,
நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால்ஹெட் போன் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ளுங்கள் .✍🏼🌹
BBC News தமிழ் - முகப்பு
நியூட்டன் தலையில் ஆப்பிள் விழவே இல்லையா? ஈர்ப்பு விசையை அவர் எப்படி கண்டுபிடித்தார்?
ஐசாக் நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்தபோது தான் அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்பதே கட்டுக்கதை. அப்படியென்றால், அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கத் தூண்டியது எது? அதில் ஆப்பிளின் பங்கு என்ன?
BBC News தமிழ் - முகப்பு
'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
BBC News தமிழ் - முகப்பு
நரேந்திர மோதி வெகுவாகப் பாராட்டும் பட்ஜெட் பற்றி பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன?
மூன்று கோடி பெண் லட்சாதிபதிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியிருக்கிறார். பொருளாதார நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்.
BBC News தமிழ் - முகப்பு
நாடாளுமன்றம்: அத்துமீறி நுழைந்த 6 பேரை எதிர்க்கட்சியுடன் தொடர்புபடுத்த சித்ரவதையா? என்ன நடந்தது?
இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த இருவர் குழப்பம் விளைவித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 6 இளைஞர்களை காவல்துறை எதிர்க்கட்சிகளுடன் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி சித்ரவதை செய்வதாக பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். என்ன நடந்தது?
BBC News தமிழ் - முகப்பு
மதுரை: காதலித்த அக்கா கொலை; காதலர் தலையை வெட்டி மந்தையில் வைத்த தம்பி
குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தும் காதலைவிட மறுத்ததால் அவரது தம்பி பிரவீன்குமார் அக்காவையும் அவரது காதலரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகவும், மேலும் தடுக்க வந்த தாயின் கையைத் துண்டாக வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
BBC News தமிழ் - முகப்பு
அமெரிக்க செனட் விசாரணையில் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்
சமூக ஊடகங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் முன்பாக விசாரிக்கப்பட்ட ஐந்து தொழில்நுட்ப நிறுவன தலைவர்களில் ஒருவரான மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டார். ஏன்?
BBC News தமிழ் - முகப்பு
அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதுதான் அதிமுகவுடன் கூட்டணி முறிவுக்குக் காரணமா?
அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று பாஜக கூறியது தான் காரணம் என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது.
BBC News தமிழ் - முகப்பு
மோதியிடம் முய்சு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மாலத்தீவு எதிர்க்கட்சி கோரிக்கை
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் உரசலுக்கு மத்தியில், மாலத்தீவு அதிபர் இந்தியப் பிரதமர் மோதியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்கட்சி ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது
BBC News தமிழ் - முகப்பு
10 வயது பார்வை மாற்று திறனாளி சிறுமி நூற்றுக்கணக்கான குழந்தைகளை படிக்க வைப்பது எப்படி?
ஹரியாணாவை சேர்ந்த 10 வயது சிறுமி தன் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கிறார். பார்வை மாற்றுத்திறனாளியான அவர் செங்கல் சூளைகளில் பணிபுரிவோர், பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரின் பிள்ளைகள் கல்வி கற்க உதவி வருகிறார்.
BBC News தமிழ் - முகப்பு
விதுர்ஷா: சவால்களை கடந்து கல்வியில் சாதிக்கும் மாற்றுத் திறனாளி மாணவி
இலங்கையைச் சேர்ந்த விதுர்ஷா, வயது 19 ஆனால் உயரம் 2 அடிக்கும் குறைவு. கல்வியில் இவர் பெற்ற உயரம் காரணமாக இலங்கை முழுவதும் அறியப்படுகிறார். அவரது பயணம் குறித்து பேசும் கட்டுரை.
BBC News தமிழ் - முகப்பு
தக்கோலப் போர்: சோழ இளவரசர் ராஜாதித்தனை வீழ்த்திய ராஷ்டிரகூட தளபதியின் வியூகம்
சோழ இளவரசன் ராஜாதித்தனை கொல்ல ராஷ்டிரகூட படைத்தளபதி தீட்டிய திட்டம் தக்கோலப் போரில் சோழர் படையின் பெரும் தோல்விக்கு வித்திட்டது. அதன் விளைவாக என்ன நடந்தது?
BBC News தமிழ் - முகப்பு
தமிழ்நாடு: சோஃபா சிறுவன் முதல் டிடிஎஃப் வாசனின் மஞ்சள் வீரன் வரை - 2023 வைரல் சம்பவங்கள்
2023-ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான வைரல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முக்கியமான, சுவாரஸ்யமான 10 வைரல் நிகழ்வுகளை மீண்டும் திரும்பிப் பார்ப்போம்.
BBC News தமிழ் - முகப்பு
சர்வதேச வர்த்தகத்தில் சீன நாணயத்தை ஏற்கும் நாடுகள் இந்திய ரூபாயை நிராகரிப்பது ஏன்?
சர்வதேச வர்த்தகத்தில் சீன நாணயமான யுவானை ஏற்கும் உலக நாடுகள் இந்திய நாணயமான ரூபாயை ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கான காரணங்கள் என்ன? சீனா என்ன செய்கிறது? இந்தியா கவனம் செலுத்த வேண்டிய விஷயம் எது?
அமெரிக்கவின் பால்டிமோரில், இலங்கை நோக்கி சென்று கொண்டிருந்த "டாலி" என்ற கொள்கலன் கப்பல் ஒரு பாலத்தின் தூண் ஒன்றில் மோதிய விபத்தால் விழுந்தது. பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Читать полностью…கைப்பேசியில் அழைப்பாளா் பெயா் அறிவிக்கும் சேவை அறிமுகம்:
டிராய் பரிந்துரை.
கைப்பேசி அழைப்புத் திரையிலேயே அழைப்பவரின் அடையாளத்தை அறிந்து கொள்ளும் ‘அழைப்பாளா் பெயா் அறிவிப்பு(சிஎன்ஏபி)’ வசதியை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வழங்க தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம்(டிராய்) பரிந்துரைத்துள்ளது.
பரிந்துரைகள் ஏற்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியான பிறகு, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கைப்பேசி சாதனங்களிலும் சிஎன்ஏபி வசதி இருப்பதை உறுதிப்படுத்த போதிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும் டிராய் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் மோசடி மற்றும் தேவையற்ற அழைப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க, அழைப்பவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் சிஎன்ஏபி திட்டத்தை செயல்படுத்த மத்திய தொலைத்தொடா்புத் துறை பரிசீலித்தது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், முன்பின் அறியாத எண்ணிலிருந்து வரும் அழைப்பை மேற்கொள்ளும் நபா் அல்லது நிறுவனத்தின் பெயா் பயனரின் கைப்பேசி திரையில் தெரியும்.
இத்திட்டம் குறித்து பரிந்துரைகளை சமா்ப்பிக்குமாறு டிராய் அமைப்பிடம் மத்திய தொலைத்தொடா்புத் துறை கடந்த 2022-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் கேட்டுக்கொண்டது.
அதன்படி, இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவது பற்றி பொதுமக்கள், தொலைத்தொடா்பு நிறுவனங்கள், கைப்பேசி உற்பத்தியாளா்கள் ஆகிய பங்குதாரா்களிடம் டிராய் கருத்துகளைக் கோரியது.
பங்குதாரா்களின் கருத்துகள் தொடா்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச்சில் விவாதமும் நடைபெற்றது.
இந்நிலையில், பங்குதாரா்களின் கருத்துகள் மற்றும் சொந்த பகுப்பாய்வு அடிப்படையில் இந்திய தொலைத்தொடா்புத் துறையில் அழைப்பாளா் பெயா் அறிவிப்பு சேவையை அறிமுகப்படுத்துவது தொடா்பாக இறுதிப் பரிந்துரைகளை டிராய் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
டிராய் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
இந்திய தொலைத்தொடா்புத் துறையில் அழைப்பாளா் பெயா் அறிவிப்பு வசதியை கூடுதல் சேவையாக அனைத்து தொலைத்தொடா்பு நிறுவனங்களும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.
ஒரு பயனரின் கைப்பேசிக்கு அழைப்பு மேற்கொளள்ளப்படும்போது, அழைப்பாளா் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள பெயா் கைப்பேசியின் திரையில் காட்சிப்படுத்த வேண்டும்.
இந்திய தொலைத்தொடா்புத் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் சிஎன்ஏபி திட்டத்தின் தொழில்நுட்ப மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியான பிறகு, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கைப்பேசி சாதனங்களிலும் சிஎன்ஏபி வசதி இருப்பதை உறுதிப்படுத்த போதிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
மொத்தமாக பல வணிக இணைப்புகளைக் கொண்டுள்ள சந்தாதாரா் நிறுவனங்கள், விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயருக்குப் பதிலாக தங்களின் விருப்பப் பெயரை திரையில் காட்சிப்படுத்திக் கொள்ளலாம்.
எனினும், மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை, ஜிஎஸ்டி ஆணையம் அல்லது அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ள வா்த்தக முத்திரையில் அந்தப் பெயா் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
பெயரின் உரிமையை நிரூபிக்க போதிய ஆவணங்களை சந்தாதாரா் நிறுவனம் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி அழைப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க நுகா்வோருக்கு இந்த நடவடிக்கை உதவும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
தற்போது, பயனா்கள் முன்பின் எண்ணிலிருந்து வரும் அழைப்பை மேற்கொள்ளும் நபா் அல்லது நிறுவனத்தின் பெயரை கண்டறிய ‘ட்ரூ காலா்’ எனும் தனியாா் செயலியின் சேவையைப் பலா் பயன்படுத்தி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
BBC News தமிழ் - முகப்பு
அயோத்தி கோவில் திறப்பு விழாவை விமர்சித்த மணிசங்கர் அய்யர் மகள்; வேறு வீட்டுக்கு மாறச் சொன்ன குடியிருப்போர் சங்கம் – என்ன நடந்தது?
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான மணிசங்கர் ஐயரின் மகள் சுரண்யா அய்யர், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சமூக வலைதளம் ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சையாகியிருக்கிறது.
BBC News தமிழ் - முகப்பு
பாதுகாப்பான மது குடிக்கும் அளவு என்ன? குடிப்பதை திடீரென நிறுத்தும்போது என்ன நடக்கும்?
மது அருந்துவதால் நம் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? அதன் விளைவுகள் என்ன?
BBC News தமிழ் - முகப்பு
தென்கொரியாவில் இருந்து வடகொரியாவிற்கு பணத்தை கடத்தும் கொரியர்கள்.. உண்மை என்ன?
தென்கொரியாவில் இருந்து வடகொரியாவிற்கு பணத்தை கடத்தும் கொரியர்கள் என்பது யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
BBC News தமிழ் - முகப்பு
சிரியா மற்றும் இராக்கில் இரானிய இலக்குகளை தாக்க அமெரிக்கா அனுமதி: காரணம் என்ன?
சிரியா மற்றும் இராக்கில் உள்ள இரானிய இலக்குகள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தும் திட்டங்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுவது என்ன?
BBC News தமிழ் - முகப்பு
ஓய்வூதியம்: பழைய திட்டத்தை அமல்படுத்தும் கர்நாடகா - தமிழ்நாட்டில் முடியாதது ஏன்?
நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகா இதை அமல்படுத்தியுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் செய்ய முடியுமா? அதிலுள்ள சிக்கல்கள் என்ன?
BBC News தமிழ் - முகப்பு
உல்ஃப்காங் பௌலி: ஐன்ஸ்டீன் தனது அறிவுசார் வாரிசாக அறிவித்த சிறந்த இயற்பியலாளர்
ஆஸ்திரியாவில் பிறந்த இயற்பியலாளர் உல்ஃப்காங் பௌலியை ஐன்ஸ்டீன் தனது அறிவுசார் வாரிசாக அறிவித்தது ஏன்? உணர்ச்சிபூர்வமான அந்தத் தருணத்தில் என்ன நடந்தது?
BBC News தமிழ் - முகப்பு
மத்திய இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?
மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. விரைவில் இந்தியப் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால், இந்த இடைக்கால் பட்ஜெட் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இங்கே வழங்கப்படுகின்றன.
BBC News தமிழ் - முகப்பு
ராமர் கோவில் திறப்பு மதச்சார்பின்மைக்கு எதிரானதா? நீதிமன்றங்களின் பார்வை எப்படி இருக்கிறது?
இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது அரசுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுவதா அல்லது எல்லா மதங்களையும் ஒரே போல் நடத்துவதா என்ற கேள்விக்கு அரசியலமைப்பு எழுதப்பட்டது முதல் தெளிவான பதில் இல்லை.
BBC News தமிழ் - முகப்பு
குஜராத்தில் போலி சுங்கச்சாவடி, 6 போலி அரசு அலுவலகங்கள் ஆண்டுக்கணக்கில் இயங்கியது எப்படி?
குஜராத்தில் போலி சுங்கச்சாவடி, 6 போலி அரசு அலுவலகங்கள் கடந்த ஓராண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போலி பிரதமர் அலுவலக அதிகாரி முதல் முதலமைச்சர் அலுவலக அதிகாரி வரை பிடிபட்டுள்ளனர். இவையெல்லாம் குஜராத்தில் சாத்தியமானது எப்படி?
BBC News தமிழ் - முகப்பு
நான்கு ஆண்டாக பூட்டியிருந்த வீட்டில் 5 பேரின் எலும்புக்கூடு - குடும்பமே இறந்தது யாருக்கும் தெரியாதது ஏன்?
கர்நாடகாவில் நான்கு ஆண்டுகளாக பூட்டியிருந்த வீட்டிற்குள் 5 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பமே உயிரிழந்தும் அண்டை வீட்டாருக்கு தெரியாமல் போனது ஏன்?
BBC News தமிழ் - முகப்பு
2024இல் சுட்டெரிக்கும் சூரியனைத் தொடப் போகும் நாசாவின் பார்க்கர் விண்கலம்
சூரியனை ஆய்வு செய்ய நாசா அனுப்பியுள்ள பார்க்கர் விண்கலம் அடுத்த ஆண்டில் பல புதிய சாதனைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனில் அப்படி என்ன செய்யப் போகிறது?
BBC News தமிழ் - முகப்பு
ஜம்மு-காஷ்மீர்: 370 சட்டப் பிரிவை நீக்கிய பிறகும் தீவிரவாதம் தலைதூக்குவது ஏன்?
கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஜம்மு காஷ்மீரின் பிர்பஞ்சல் பகுதி தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான என்கவுன்ட்டர்கள் குறித்த செய்திகள் வாயிலாக மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. என்ன பிரச்னை? உளவுத்துறை அங்கு சரியாகச் செயல்படவில்லையா?
BBC News தமிழ் - முகப்பு
உளவு எச்சரிக்கை: இந்திய அரசின் நெருக்கடியால் ஆப்பிள் நிறுவனம் பின்வாங்கியதா? திரைமறைவில் நடந்தது என்ன?
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்ஃபோன் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்திய அரசு நெருக்கடி கொடுத்ததாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் நெருக்கடியால் ஆப்பிள் நிறுவனம் பின்வாங்கியதா? திரைமறைவில் என்ன நடந்தது?