zha_meems | Unsorted

Telegram-канал zha_meems - ழ மீம்ஸ் | Zha Meems

-

தமிழின மீட்சியும், எழுச்சியும், தற்சார்பும் காலத்தின் தேவை முகநூல் இணைப்பு: https://facebook.com/ZhaMeems

Subscribe to a channel

ழ மீம்ஸ் | Zha Meems

மத்திய அரசுக்கு சித்தமருத்துவ ஆய்வுகள் என்றாலே எட்டிக் காயாகக் கசக்கிறது! அதே சமயம் பல வருட ஆராய்ச்சியில் நடைமுறை ரீதியாக நாம் நிருபித்த சித்த மருத்துவக் கண்டுபிடிப்புகளை ஆயூர்வேத கண்டுபிடிப்பாக மனசாட்சியின்றி மடைமாற்றம் செய்வது இனிக்கிறதோ…?

Aram Online
https://aramonline.in/8555/siddha-converted-to-ayurveda-govt/

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

தமிழ்நாட்டுல தான் இதுக்கு பேரு பாலியல் வன்கொடுமை. எங்க யோகி ஆளும் உபி-ல தேஷ பக்தி மிகுந்த பாலியல் ஆர்வலர்களின் தேஷ தொண்டு.

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

வளர்ந்து வரும் முப்பரிமாண வர்த்தகப் போரில் சிக்கும் தமிழர் பிரதேசங்கள்

பழைய சோவித் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகள் பலவும் பொருளாதார முன்னேற்றம், தொழில் நுட்ப வளர்ச்சி, மற்றும் ஐனநாயகம் மற்றும் மனித உரிமை சார்ந்த நவீன உலக ஒழுங்குமுறை போன்ற காரணங்களால் ஐரோப்பிய யூனியன் மற்றும் NATO வில் சேர்ந்த ஆனால் கிட்டதட்ட 30 ஆண்டுகள் மேலாகியும் அவர்களின் நோக்கம் நிறைவேறியதா என்றால் இல்லை .. பிறகு இந்த பிரதேசங்களில் கிளர்ச்சி ஏற்படாமல் என்னவாகும்? இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல

இதைப்ற்றி இந்த மாத முதற் வாரத்தில் வெளியான தமிழர் ஆய்வுகூடத்தின் கட்டுரை..



https://trionline.org/2022/02/10/trilateral-trade-war-in-tamil/

Tamil version of ‘Emerging Trilateral Trade in The Land of Tamils’

https://trionline.org/2022/02/05/emerging-trilateral-trade-war-at-the-land-of-tamils/


#Tamil_Research_Institute
#தமிழர்_ஆய்வுக்கூடம்

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

முட்டாள் தனமான ஒரு இழி சமுதாயத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது சங்கிக்கூட்டம். இந்தியா எந்த மதத்தையும் சாராத ஒரு சமத்துவ நாடு என்பதை உணராமல் இந்து நாடு எனும் கூவல் செய்யும் இந்த சென்மங்கள் தான் #RealAntiIndians

ஒரு பெண் தனது முகத்தைக்காட்ட விரும்பாதது என்பது அவளது தனி விருப்பம். தனி மனித உரிமையும் கூட. முகத்தைக்காட்ட விரும்பாத பெண்ணின் முகத்தை காட்ட நிர்பந்திப்பது பாசிசம், தீவிர வாதம், மனித உரிமை மீறல். இதைத்தான் இவர்களது மதம் போதிக்கிறதா?

கல்விச்சாலைக்குள் ஒருபெண் இசுலாமிய உடை உடுத்தக்கூடாது என்றால், பூநூல் அணிவதும் குடுமி வைப்பதும் மத அடையாளம் தானே, அதனை வைத்தும் எவனும் உள் நுழையக்கூடாது என எந்த யோக்கிய சிகாமணியாவது பேச இயலுமா...

சீக்கியர்களில் தலைப்பாகையும் மத அடையாளமே, அதை அணிந்து யாரும் வரக்கூடாது என இந்த யோக்கிய சிகாமணிகள் சொல்லிப்பார்க்கட்டும். அப்படியானவர்களை இந்து வீரன் என நான் ஆராதிக்கிறேன்.

இனியும் இப்படியான கேடுகளை, "இது நம் சிக்கல் இல்லை" என நாம் கடந்து செல்வோமேயானால், பின்வரும் காலங்களில் இதைப்போன்ற வேறு சிக்கல்களும், கலாச்சார திணிப்புகளும் நமக்கும் நிகழ்த்தப்படும்.

இனிவரும் காலம் இன்னமும் கடினமாகும்.

/channel/Zha_Meems/784

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

60 ஆண்டுகள் ஊழல் செய்து இந்திய வளங்களை தின்றுக்கொழுத்த காங்கிரசின் சொத்துக்களை 7 ஆண்டுகளில் விஞ்சிய பாஜகவின் சொத்து.

ஆனாலும் இது ஊழல் கரைபடியா கட்சி.

#வெளியே_சொல்லாதேள்

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

ஈழத்தில், சிங்கள நாய் குண்டுகள் வீசி, கொத்துக்கொத்தாக பால்குடி மாறாத குழந்தைகளும் கொன்றபொழுது இந்த ராகுலும் இவனது கைபுள்ளைகளும் மனவளர்ச்சி குன்றியிருந்தனர் போல... இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றக்கூட எதிர்ப்பு தெரிவித்த நாய்கள் இன்று முதலைக்கண்ணீர் வடிக்கிறது. கேடுகெட்ட நாய்கள்...

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

அடிமை #அதிமுக ஆட்சி மாறிவிட்டது, அதிகாரம் மாறவில்லை...
ஸ்டாலினை ஆட்டி படைக்கும் அதிகாரிகள் - வேல்முருகன் MLA

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

விஸ்வநாத் பிரதாப் சிங் என்றொரு மீட்பர்
------------------------------------
குறுகிய காலமே இந்தியாவின் பிரதமராக இருந்த வி.பி. சிங், இந்தியாவின் முக்கியமான பிரதமர்களில் ஒருவர். அவர் அமல்படுத்திய இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் யாரும் அவரை நினைவுகூர மாட்டார்கள். ஆனால், அதுவரை வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் அவரை நினைவுகூர்வது அவசியம்.

போர் நடக்கும்போதோ, வேறு இக்கட்டான சூழல்களிலோ வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானம் மூலம் தாய்நாடு அழைத்துவர அரசு பெருந்தொகையான பணத்தை வசூலித்து வருகிறது. ஆனால், 1990ல் வளைகுடா யுத்தம் நடந்தபோது குவைத்திலிருந்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு மீட்டுவரப்பட்டனர். அப்போது யாரிடமும் பணமும் வாங்கப்படவில்லை.

அந்தத் தருணத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அப்போதைய பிரதமர் வி.பி. சிங்கின் மீடியா ஆலோசகராக இருந்த பிரேம் ஷங்கர் ஜா விரிவாக எழுதியிருக்கிறார்.

வளைகுடா யுத்தம் நடந்தபோது குவைத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றிவந்தார்கள். அந்தத் தருணத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்தது.

இந்தியர்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது என சதாம் ஹுசைன் வாக்குறுதி அளித்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் நாடு திரும்பவே விரும்பினார்கள். ஆனால், அந்தத் தருணத்தில் குவைத்திலிருந்தே இந்தியாவுக்கு அவர்களை அழைத்துவர வழியில்லை. ஆகவே இந்தியர்களை பஸ்ராவிலிருந்து 1120 கி.மீ தூரம் தரைவழியே அம்மான் வரை அழைத்துவந்து, அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவர சதாமிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

அப்போது ஏர் இந்தியாவிடம் சில 747 ரக விமானங்களே இருந்தன. அவை அனைத்தையும் வர்த்தக சேவையிலிருந்து விலக்கி, இந்தப் பணியில் ஈடுபடுத்த பிரதமர் வி.பி. சிங் நினைக்கவில்லை. ஆகவே இந்தியன் ஏர்லைன்ஸ் அப்போதுதான் வாங்கியிருந்த ஏர்பஸ் ஏ 320களை பயன்படுத்த முடிவுசெய்தார்.

இந்தியன் ஏர்லைன்ஸ் வாங்கியிருந்த இரண்டு ஏர்பஸ்களில் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. மீதமிருந்த ஒரு விமானம் வர்த்தக சேவையிலிருந்து விலக்கப்பட்டிருந்தது. அந்த விமானத்தை இந்த சேவையில் இறக்கினார் வி.பி. சிங்.

அந்த விமானம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தினமும் 16-18 மணி நேரம் என்ற ரீதியில் தொடர்ந்து பறந்தது. மொத்தம் 488 தடவைகள். 1,11,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். இப்போதுவரை, உலகில் எந்த ஒரு நாடும் இவ்வளவு பெரிய அளவில் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதில்லை.

இந்த நடவடிக்கையில் பில்லியன் டாலர்கள் வரை செலவானது. அப்போது அன்னியச் செலாவணியே இல்லாத காரணத்தால், 55 டன் தங்கத்தை அடகுவைக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது.
மற்றொரு நெருக்கடியும் ஏற்பட்டிருந்தது.

குவைத்தை ஈராக் ஆக்ரமித்தது 1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி. அப்போது வி.பி. சிங் அரசு ஒரு மைனாரிட்டி அரசு. அவருக்குக் கிடைத்த உளவுத் தகவல்களின்படி, அத்வானி நடத்திவந்த ரத யாத்திரை அக்டோபர் 30ஆம் தேதி முடிந்த பிறகு, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்ள பா.ஜ.க. முடிவெடுத்திருந்தது.

என்ன நல்லது செய்தாலும் இதில் எதுவும் மாறப்போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். இருந்தபோதும் இந்தியர்களை மீட்பது இந்தியாவின் கடமை என அவர் நம்பினார். அந்த மீட்பு நடவடிக்கைக்கு மாட்டிக் கொண்டிருப்பவர்களிடம் பணம் கேட்பது என்ற கேள்வியே எழவில்லை.

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு திடீரென அமல்படுத்தப்பட்டபோது, நாடு முழுவதும் கோடிக் கணக்கானவர்கள் நடந்தது குறித்து அரசு பேசாமல் இருந்ததோடு ஒப்பிட்டுப் பார்த்தால், வி.பி. சிங் செய்ததன் பிரம்மாண்டம் புரியும்.

ஆனால், இப்படி வெளிநாடுகளில் சிக்கியிருவர்களை மட்டுமல்ல, ஜாதி, சமூக அமைப்பின் காரணமாக வாய்ப்புகள் வழங்கப்படாமல், மறுக்கப்பட்டிருந்த பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையையும் மீட்டார் வி.பி. சிங்.

இந்திய அரசியலில் காணாமல் போயிருந்த தார்மீகம் சார்ந்த, அறம் சார்ந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பித்தவர் வி.பி. சிங். போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ரூ. 60 கோடி லஞ்சமாகப் பெற்றதாக ராஜீவை உலுக்கியெடுத்தார். இந்த விவகாரமே வி.பி. சிங்கிற்கு பிரதமர் பதவியைப் பிடித்துத் தந்தது. மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது அவரது மற்றொரு சாதனை.

அவரது இந்த நடவடிக்கை வட இந்திய அரசியலின் முகத்தையே மாற்றியமைத்து. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியதுதான் என்று நமக்கு சர்வசாதாரணமாகத்தான் தோன்றுகிறது.
ஆனால், வட இந்தியாவில் வாழ்பவர்களுக்கு அப்படித் தோன்றுவதில்லை. தமிழராக இருந்து வட இந்தியாவில் வாழ்ந்தாலும் இதே எண்ணம்தான் இருக்கும். அப்படியிருக்கையில் 80களின் இறுதியில் கடும் எதிர்ப்புக்கு இடையில் இந்த அறிக்கையை ஏற்றார் வி.பி. சிங்.

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

ஜெய்பீம் கதைக்கருவான ராசாகன்னு குறும்பகுறவர் இனம் #MBC ல் வருகிறது. பழங்குடி இனத்திற்கு MBC பட்டியலில் இணைந்திருப்பது அந்த இனத்திற்கு பெரும் அநீதி தானே? அதைகேட்போர் யார்? #ST க்கு மாற்ற கோரிக்கை வைப்பார் யார்?

#JaiBeam

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

கேரளாவில் மழை/வெள்ளம் வரும்போதெல்லாம் தமிழக மக்கள், கேளரளத்தவர் மீண்டுவர நிவாரணப்பொருட்கள் அனுப்புவார்கள், நிதியளித்து உதவிக்கரம் நீட்டுவாரகள், பிரார்த்தனை செய்வார்கள் ( ஏன் தமிழக அரசே கூட கோடிக்கணக்கில் நிதியளித்துள்ளது).

ஆனால் ஒவ்வொரு வெள்ளத்தின்போதும் கேரள அரசும், மலையாள மீடியாக்களும் தவறாது முல்லைப்பெரியாறால் ஆபத்து, அதனை அக்கற்றவேண்டும் என்ற விஷமப்பிரச்சாரத்தை, பொய்ப்பிராச்சாரத்தை ஒருபக்கம் முடுக்கிவிடுவார்கள். இவ்வருடம் அதற்கு பிரித்விராஜ், ஜோஜு ஜார்ஜ் (ஜகமே தந்திரம் திரைப்படத்தில் ”தமிழ்போராளி” வேடத்தில் நடித்த நாதாரி) போன்றவர்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்கள் மூலம் எரியூட்டுகிறார்கள்.

தமிழர்கள் என்ன நல்லது செய்தாலும் சிறிதும் நன்றியில்லாதவர்கள் கேரளத்தவர்கள். கோழிக்கழிவு குப்பைகளை நம் எல்லையில் கொட்டுவார்கள், சபரிமலைக்கு செல்லும் அப்பாவி பக்தர் மீது வெண்ணீர் ஊற்றுவார்கள், தேசியத்தலைவரை இழிவுசெய்து தங்கள் படங்களில் காட்சி வைப்பார்கள், தமிழர்களை தவறாக தங்கள் படங்களில் காட்டுவார்கள், தமிழ் தோட்டத்தொழிலாளிகளை அச்சுறுத்துவார்கள், தமிழக கணிமவளங்களை கொள்ளையடிப்பார்கள், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நாம்தான் இளிச்சவாய்த்தனமாக அவர்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்.

இப்போதாவது தக்க பதிலடி கொடுப்போம். ஒரு மலையாளியும் தமிழக திரைப்படங்களில் பணியாற்றக்கூடாது என தமிழ்த்திரையுலகிற்கு கோரிக்கை வைப்போம். அப்படியில்லாவிட்டால் மலையாளிகள் நடிக்கும் தமிழ்த்திரைப்படங்கள் மட்டுமல்லாது, அவரகளை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள்/தயாரிப்பாளர்கள் அனைவரின் படங்களையும் புறக்கணிப்போம்.

இப்படிப்பட்ட எதிர்வினைகள் இல்லாவிட்டால் நம்மை அவர்கள் ஏறிமிதித்துகொண்டேதான் இருப்பார்கள்.

- வெற்றி திருமலை

#SaveMullaiPeriyar
#SaveMullaPeriyar
#SaveTamilNadu
#SaveTN

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட ராஜ்கிரனுக்காக அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை, பாசிச பாஜகவின் அடிமையாகிவிட்டாரா? திராவிட, கம்யூனிச இயக்கங்களும் கள்ளமவுணம் சாதிக்கிறதே...

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

ஜி மட்டும் தாமர சின்னத்துல நின்னிருந்தா, எல்லா ஓட்டும் ஜிக்கு தான், சின்னம் கிடைக்காம சதி பன்னீட்டாங்க....

#சிங்கிள்_ஓட்டு_சங்கி
#ஒத்த_ஓட்டு_பாஜக
#Single_Vote_BJP

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

ஆறாம் நிலம் | The Sixth Land - ஈழத்தமிழர்களின் வலிகளையும் துயரங்களையும் எடுத்துவரும் ஆறாம் நிலம் - திரைப்படம்

https://youtu.be/pJ_K7XPDZAY

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

19000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் #பாஜக ஆளும் #குஜராத் மாநிலத்தில், #மோடி யின் நண்பன் #அதானி க்கு சொந்தமான துறைமுகத்தில் DRI எனப்படும் directorate of revenue intelligence வசம் சிக்கியுள்ளது.

இதுவும் customs வசம் சிக்காமல் DRI வசம் சிக்கியுள்ளது எனில், இதற்கு முன் customs கரெக்கட் செய்யப்பட்டு இதே போன்ற போதைப்பொருள் consignment உள்ளே வந்திருக்க வாய்ப்பு அதிகம். இப்போது DRI வசம் சிக்கியுள்ளது , ஏதோ customs உள்மோதல் விவகாரத்தில் insider ஏ DRI வசம், இந்த consignment விவகாரத்தை போட்டு கொடுத்திருக்க வேண்டும்.

இது போன்று export ல fake / jacked invoice மூலம் ஏற்றுமதி செய்த மாதிரி காட்டி, ஹவாலா பணப்பறிமாற்றம் நடந்திருக்கவும் செய்யலாம்.

நாட்டிலுள்ள துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் அதானி தன் கட்டுப் பாட்டில் கொண்டு வர இருக்கும் காரணம், இப்ப புரிகிறதா!?

இதுவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான மேற்கு வங்க மாநில Haldia துறைமுகத்திலோ, தமிழகத்தின் சென்னை / தூத்துக்குடியிலோ, கேரள மாநில கொச்சி துறைமுகத்திலோ கண்டு பிடிக்கப்பட்டிருந்தால்!!!?

-Jose Kissinger

#Adani #talibanes #Heroin #Adaniport #MundraPort #தாலிபான்

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

லியல் துறை சென்னை.

அவருக்கு நன்றி !
படம் கிடைத்த எஃகு வாளின் தோற்றம்.

குணசீலன் சாமுவேல்
15.09.2021

https://www.facebook.com/100003223617350/posts/4249557805161631/

..
..

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

முற்றுகையிடப்பட்டது ஜனாதிபதி இல்லம் அமைந்துள்ள பகுதி! சம்பவ இடத்தில் பலத்த பாதுகாப்பு: கடும் பதற்ற நிலை (Live) - தமிழ்வின்
https://tamilwin.com/article/protest-in-the-mirihana-area-1648740494

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

எல்லாளன் : தமிழீழ திரைப்படம்

https://eelapparavaikal.com/eallalan-eelam-movies/

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

கல்விக்கூடங்களில் காவிக்கொடி என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரான செயல்.

இவர்களே #RealAntiIndians

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

A lone Muslim girl on the way to her college in Karnataka, India is being heckled and harassed by a Hindu right-wing mob for wearing a hijab!

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

திருவள்ளுவராம்.... நம்பீடுங்க 😂🤣😂

இதை திருவள்ளுவர் சிலை என கதை அளக்கும் சங்கீகளிடம் ஒரு கேள்வி...

ரிஷிகேஸில் வைக்க, செய்த வள்ளுவர் சிலை என்ன ஆனது?

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

ரெண்டாயிரத்தி தொண்ணூத்தி எம்பத்தெட்டு 😂😂😂
https://youtu.be/OSuBkDXKrpo
.

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

ற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்கள் அரசுப் பணிகளில் சேர்ந்தார்கள்.

நாட்டைத் துண்டுபோடும் நோக்கத்தோடு அத்வானி ரத யாத்திரையைத் நடத்தியபோது, அவரைக் கைது செய்து தடுத்து நிறுத்தினார் வி.பி. சிங். அதற்குப் பிறகு தன் ஆட்சி நிலைக்காது என்று தெரிந்தும் இதைச் செய்தார்.

நிதி அமைச்சராக இருந்தபோது தீருபாய் அம்பானியையும் அமிதாப் பச்சனையும் ஆட்டி வைத்தது, சம்பல் பகுதியில் நடந்த கொள்ளைகளுக்குப் பொறுப்பேற்று உத்தரப் பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது,

பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த நடவடிக்கைக்காக இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் மன்னிப்புக் கேட்டது, இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையிலிருந்து திரும்ப அழைத்தது போன்றவை அவருடைய பிற குறிப்பிடத்தக்க செயல்கள். பொதுத் தேர்தலை தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார் வி.பி. சிங். இதில் தி.மு.கவுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லையென்றாலும் அமைச்சரவையில் சேர வேண்டுமென வற்புறுத்தி, சேர்த்துக்கொண்டார் வி.பி. சிங்.

1996ல் பிரதமர் பதவி தேடி வந்தபோது, அதை மறுத்தது மற்றொரு புத்திசாலித்தனமான, சரியான நடவடிக்கை. படுக்கையில் விழும்வரை பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த வி.பி. சிங், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் மக்கள் போராட்டங்களிலிருந்து கிளைத்தெழுந்த ஒரு தலைவனாகவே தன் கடைசி நாட்கள் வரை இருந்தார் வி.பி. சிங்.

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

கொரோணா தடுப்பூசி ஊசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை எனும் திமுக அரசின் பாசிச நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் இந்த பக்கத்தில் பதிவு செய்யவும்..

Can you help me out by signing this petition?


https://chng.it/cnj2LGVGJb

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

Pon Tharini, a student who formerly studied at Chinmaya Vidyalaya, RS Puram, Coimbatore, took her own life last Thursday, after being sexually assaulted by a teacher in her school. The culprit needs to be brought to justice, more people should know about this, this is not a matter that should be hushed or swept under the rug, this is our attempt to not let things go their way. We need to address this, more people need to know about this, our voices need to be heard and justice must be sought.

https://chng.it/Z5y5tBrTyZ

#Justice4PonTharani #JusticeForPonTharani

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

தனியார் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் காடுகளை வணிகமயமாக்கும் முயற்சியை எதிர்ப்போம்.

உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய👇

https://t.co/P5oZ9qGDSF

#ScrapFCA2021

நன்றி : இணையதள போராளிகள் 2.0

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

பிடிவாரண்ட் இருந்தும் பிடிக்க முடியாத ஒரே ஒப்பற்ற தலைவன், எங்கள் ஹிந்துவீரன் ராஜாஜி. துணிவிருந்தால் பிடித்து பாருங்கள்...

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

இவர்களெல்லாம் தான் முட்டாள்களின் மொழியான கிந்தியை, வயிற்றுப்பிழைப்புக்காக தேசிய மொழியாக்க பாடுபடும் அறிவீனர்கள். இத்தகைய விளம்பரங்களை காணுவோர் தவறாமல் Misleading என ரிப்போர்ட் அடித்து விடுங்கள்.

இவர்களெல்லாம்... மொழியை கற்பதில் தவறில்லை, மொழியறிவு மிகத்தேவை என பாடம் நடத்துவார்கள். ஆனால் இவர்கள் தான் நச்சு செடிகள். நேருவின் ஆட்சியில் கிந்தியை தேசியமொழியாக அறிவிக்கும் நிலை வந்தபொழுது, பெரும்பான்மை தேசிய இனங்கள் எதிர்த்தனர். அந்த தருணத்தில், ஹிந்தி எப்பொழுது இந்தியாவின் பெரும்பான்மையானோர் பேசும் மொழியாக வளர்ந்து நிற்கிறதோ அப்பொழுது இந்தியாவின் தேசிய மொழி என அறிவிக்கப்படும் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டது.

இன்று கிந்தியை பெரும்பான்மையானோர் பேசும் மொழியாக்க, இந்த பிழைப்பு வாதிகள் பாடுபடுகிறார்கள். இந்தியத்தின் கிந்தித்தினிபிற்கு ஒத்து ஊதிகள் இவர்களே.

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

செட்பெம்பர் சங்கி - Setpember Sangi

#Setpembar

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

மகன் பிறக்க வேண்டும் என விரும்பும் கணவனும் மனைவியும், சோற்றுடன் காளை மாட்டுக் கறியை, வெண்ணெயில் சமைத்து சாப்பிட வேண்டும்.

The Bṛhadāraṇyaka Upaniṣad (with the Commentary of Śaṅkarācārya), translated into English by Swāmī Mādhavānanda, published by the RK Mission.

https://www.facebook.com/106949484614803/posts/266722351970848/

Читать полностью…

ழ மீம்ஸ் | Zha Meems

3500 ஆண்டுகள் பழமையான தொல்தமிழரின் எஃகு வாள் !

நான் அண்மையில் வரலாற்றில் போர்வாட்கள் எனும் ஒரு தொடர் எழுதினேன்.

அதன் முதல் பகுதி பெருவாரியாக நண்பர்களால் விரும்பிப்படிக்கப்பட்டது. அது அப்போது 180 முறைக்கு அதிகமாக ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து மேலும் இரண்டு பகுதி எழுதினேன். அதுகுறித்து எழுத இன்னமும் நிறைய தரவுகள் சேர்த்து வைத்திருக்கிறேன்.

தொல் தமிழரின் தொழில் நுட்பம் ,திறமைக்குறித்து எழுத இன்னமும் நிறைய செய்திகள் இருக்கின்றன.

இப்போது இத்தகைய செய்திகளின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும்வகையில் அண்மையில் நடந்த ஒரு அகழாய்வில் கிடைத்த ஒரு வாள் கரிம சோதனையில் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தயது என்று அறியப்பட்ட அண்மையில் நடந்த ஒரு அகழாய்வாய்ப்பற்றி கூறப்போகிறேன் .

தமிழ்நாட்டில் இரும்புக்காலம் எனும் பெருங்கற்காலப் பண்பாடு பரவலாகக் காணப்பட்டாலும் ,
அண்மையில் சேலம் மேட்டூர் அணைக்கு அருகில் இருக்கும் தெலுங்கலூர் எனும் ஊரில் கிடைத்த
ஒரு ஈமத்தாழியில் அடியில் கிடைத்த வாள் ஒன்றின் ஒரு சிறியப்பகுதி ஒன்றை கரிம சோதனைக்காக அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டு அறிவியல் முறைப்படிக் காலக்கணக்கு செய்யப்பட்டது. அதில் அந்த வாளில் இருந்து எடுக்கபட்டத்துண்டு கி மு 1435 முதல் கி மு 1233 வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது .

அதாவது இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முந்தையது, கி. மு. 13 நூற்றாண்டை சேர்ந்தது என்று அறிவியல் ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டது. (lab code AA 99857 )

அதன் அருகாமையில் இருக்கும் மாங்காடு ஈமதாழியில் இருந்து கிடைத்த இரும்புத்துண்டு ஆய்வில் கி. மு. 1604 இல் இருந்து கிமு 1416 க்குள் இருக்கலாம் என்றுகணிக்கப்பட்டது.

அதன்படி எடுத்துக்கொண்டால் 1604+ 2019 = 3623 ஆண்டுகள் என்றும் 1416+ 2009 =3435 என்றும் உறுதி ஆகிறது. .Lab code AA104114 )

தெலுங்களூர் மற்றும் நாகமரை ஆகிய இடங்களில் இரண்டுவகையான பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் காணப்படுகிறது. தெலுங்களூரறை சுற்றியுள்ள மாங்காடு கோரப்பள்ளம் போன்ற ஊர்களில் கல்வட்டங்கள், கல்வட்டங்களுடன் கூடிய கற்பதுக்கைகள், மற்றும் முதுமக்கள் தாழி போன்ற மூன்று வித ஈமச் சின்னங்கள் கிடைக்கின்றன. இறந்தவர்களை அடக்கம் செய்யும் இம்மூன்று முறைகள் சமகாலத்தில் விளங்கி வந்தது குழி, ஈமத் தாழி, கற்பதுக்கைகள்ஆகிவையை மூன்று வேவேறு விதமான நம்பிக்கைகள் கொண்ட சமுதாய மக்கள் அங்கே வாழ்ந்திருந்தைக் குறிக்கிறது.

தெலுங்களுரில் காணப்படும் ஒவ்வொரு கல்வட்டமும் ஒன்று முதல் ஆறு மீட்டர் இடைவெளியில் 2முதல் 4 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கிறது. அங்கிருக்கும் 500க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் அடங்கியத்திட்டை மக்கள் 'பாண்டியன் திட்டு' என்று அழைக்கின்றனர் .
அங்கு செங்கல் சூளைக்கு மனதோடும்போது ஈமச் சின்னம் ஒன்றில் இரண்டு பளபளப்பான புதிய கற்கால கருவிகள், இரும்பு பொருள்கள், அதிக எண்ணிக்கையிலான கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள்,கருப்பு மண்பாண்டங்கள் கிடைத்தன. மேலும், எஃகு வாள் பெருங்கற்கால ஈமச்சின்னத்தில் இருந்து எடுக்கப்பட்டது .

88 செ மி நீளம் 4.7 செ மி அகலம் கொண்டதாக அந்த வாள் இருந்தது. இவ்வாள் ஈமச் சின்னத்தின் அடிப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது .

அதன் கரிம ஆய்வின் மூலம் அது 3500 ஆண்டுகள் பழமையானது என்று அறியப்பட்டது.
அதன் கரிம செறிவு 1.2 % என்று அறியப்பட்டது.

அண்மையில் மக்கள் கவனம் பெற்ற கீழடி ஆய்வு கி. மு. ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தது. ஆனால், சேலம்
தெலுங்களுரில் கிடைத்த வாளின் மூலம் ஆய்வில் அது கிமு 13 நூற்றாண்டிற்குபண்டைத் தமிழரின் தொன்மை அறிவியலை கொண்டு செல்கிறது.

உயர்தர எஃகு வாள் செய்து பயன்படுத்த செய்த தொல் தமிழர்கள் பேசவும் எழுதவும் அறியாமலா இருந்திருப்பார்கள்?

ஆனால் எழுத்துக்கள் அங்கே கிடைக்கவில்லை.
கி மு 13 ஆம் நூற்றாண்டிலேயே மிகுந்த அறிவியல் திறமையுடன் எஃகு செய்யும் திறன் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் எனோ இவைகள் இன்றைய தமிழர்கள் அதிகம் அறியும் வகையில் கூறப்படவில்லை .
எகிப்த்திய சுமேரிய நாகரிகத்துடன் ஒப்புநோக்கத்தக்க நாகரீகம் உள்ள தொல்தமிழ்ர்கள் மற்றும் அவர்களது தொடர்பில் இருந்தவர்கள் என்று காட்டும் இலக்கிய ஆதாரம் மட்டும் ஆதாரம் மட்டும் இல்லாமல், இப்போது சேலம் அகழாய்வில் மூலம், அறிவியல் கரிம சோதனை மூலம் தொல்தமிழர் நாகரீகம் கிமு 13 நூற்றாண்டிற்கு செல்லமுடிகிறது.

மேலும் அவர்கள் சேலம் கஞ்சமலை இரும்புத் தாதுமணலை 3500 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்த அறிந்திருக்கிறார்கள்.

இன்னமும் தொல் தமிழர்களின் தொழில்திறமைப்பற்றி நிறைய சொல்ல இருக்கிறது மீண்டும் சொல்வேன்.

# அண்ணாமலை சுகுமாரன்

15/9/2020 Repost 15/9/2021
ஆதாரம் இதைப்பற்றிய ஒரு கட்டுரை 'அரண்' எனும் பன்னாட்டு முனைவர் தமிழாய்வு மின்னிதழில் அக்டோபர் 2019 இல் வெளிவந்தது. இந்தக்கட்டுரையை எழுதியவர் முனைவர் இரா. ரமேஷ் தொல்லியல் ஆய்வாளர், இந்திய

Читать полностью…
Subscribe to a channel